ஆகாஷை சந்தித்த இனியா, பாக்கியா வீட்டில் செல்வி கணவர் செய்த ரகளை - அடுத்து என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் போலீஸ், இனியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது. கட்டாயப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, இது பொய்யான புகார். அவளுடைய அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் தான் அவர் இந்த மாதிரி செய்துவிட்டாள் என்றெல்லாம் சொன்னார். உடனே போலீஸ் விசாரனையில் இனியா, நான் தான் போன் செய்தேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நான் காதலித்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் தான் இந்த கட்டாய கல்யாணம்.
என்னுடைய பாட்டியும், அப்பாவும் தான் எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொன்னவுடன் போலீஸ் ஈஸ்வரி, கோபியை மிரட்டி விட்டு சென்றார்கள். மாப்பிள்ளை வீட்டாருமே சென்று விட்டார்கள். அதற்குப்பின் இனியாவையும், பாக்கியாவையும் ஈஸ்வரி திட்டி இருந்தார். உடனே இனியா, இனி மேலும் நீங்கள் எனக்கு திருமண ஏற்பாடு செய்தீர்கள் என்றால் நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று சென்றார். எதுவும் பேச முடியாமல் ஈஸ்வரி-கோபி அமைதியாகி விட்டார்கள். அதற்கு பின் கோபி எல்லோரையும் வரவைத்து, இனி நான் இங்கு எதற்கு இருக்கணும். நான் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி பதறி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, இனிமேல் நான் யாருக்கும் தொந்தரவாக இருக்க மாட்டேன். என் பிள்ளைகளுடைய வாழ்க்கைக்காக தான் இருக்கிறேன். எங்கிருந்தாலும் என்னுடைய கவனம் உங்கள் மீதுதான் இருக்கும் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். ஈஸ்வரி, எவ்வளவு கேட்டுமே கோபி கேட்கவில்லை. உடனே ஈஸ்வரி, நானும் உன்னுடன் வருகிறேன் என்று தன் மகனிடம் புலம்பி இருந்தார்.
புது வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கோபி செய்தார். அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்த செல்வின் கணவர், தன் மகனை அடித்ததற்காக நியாயம் கேட்டு சண்டை போட்டார்.
நேற்று எபிசோட்:
ஈஸ்வரியும் கோபியும் அவரை மோசமாக திட்டி இருந்தார்கள். இருந்தாலுமே, அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செல்வியின் கணவர் சண்டை போட்டார். உடனே எழில், அவரை ஏதோ சொல்லி அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். அதன் பிறகு பாக்கியா, செல்வியிடம் இதைப்பற்றி பேசி இருந்தார். செல்வி, அவர் வந்தது எனக்கு தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இதை நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் யுபிஎஸ் எக்ஸாம் தேர்வு நடைபெறுகிறது என்று செய்தி வந்தவுடன் இனியா, ஆகாஷை நினைத்துப் பார்க்கிறார். பின் ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்ல எழில் இடம் இனியா போன் கேட்கிறார். ஆனால், எழில் முடியாது என்று மறுக்கிறார். அதற்குப்பின் எழில், இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு செல்கிறார். அப்போது ஆகாசிடம் எழில், உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்தோம் என்று சொல்கிறார். பின் இனியா- ஆகாஷ் இருவரும் பார்த்துக்கொண்டவுடன் எமோஷனலாக கண்கலங்குகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இருந்தாலுமே பாக்கியாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். பின் இனியா, ஆகாசுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார். அந்த சமயம் பார்த்து வந்த ஆகாஷின் அப்பா, இனியா-எழிலை திட்டுகிறார். உடனே ஆகாஷ், தன் அப்பாவை தடுத்து நிறுத்தி அவர்களை அனுப்பி விடுகிறார். அதற்கு பின் நான் இதைப் பற்றி எல்லாம் பாக்கியாவிடம் எழில்-இனியா இருவரும் சொல்லி விடுவதால் பாக்யாவும் கோவப்படாமல் சரி என்கிறார். இன்னொரு பக்கம் செல்வியின் கணவர், இனிமேல் உங்கள் மகள் எங்கள் வீட்டிற்கு வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு செல்கிறார். இதனால் ஈஸ்வரி-கோபி இருவருமே கோபப்படுகிறார்கள். கடைசியில் எழில்-இனியா-பாக்கியா மூவரும் வீட்டிற்கு வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.