பாக்கியாவிற்கு இனியா செய்த சத்யம், ஆவேசத்தில் கொந்தளித்த ஈஸ்வரி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் மொத்த வீடுமே ஷாக் ஆகி கோபப்பட்டார்கள். பாக்கியா என்ன சொல்வது என்றே புரியாமல் உறைந்து விட்டார். ஈஸ்வரி, இனியாவை பயங்கரமாக திட்டி அடித்தார். செழியன்- கோபி இருவருமே, ஸ்டேட்டஸ் தேவையில்லை. வேலைக்காரி பையன் ஒரு ஆளா என்றெல்லாம் ரொம்ப மோசமாக செல்வியையும், ஆகாஷை திட்டி இருந்தார்கள். உடேன ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். பிள்ளையை ஒழுங்காக கவனிக்க வேண்டும். எழிலுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் தான் இந்த விளைவு.
எல்லாத்திற்குமே காரணம் பாக்கியா தான் என்று வழக்கம்போல அவள் மீது பழியை போட்டார். அந்த சமயம் பார்த்து செல்வி வீட்டுக்கு வந்தார். உடனே ஈஸ்வரி- செழியன் இருவருமே உங்கள் மகன் செய்த வேலைக்கு என் கண்ணில் பட்டால் அடித்தே கொன்று விடுவேன் என்றெல்லாம் சொன்னார்கள். பின் இனியா காதலிக்கும் விஷயத்தை சொல்லி செல்வியை பயங்கரமாக திட்டி அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பி இருந்தார்கள் பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த செல்வி, தன் மகனிடம் உண்மையை கேட்டு அவனை அடித்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் செல்வி, பாக்கியா பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் ஆகாஷிடம் சொல்லி அவனை அடித்தார். ஆகாஷ், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே மனமடைந்து மன்னிப்பு கேட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே இனியா செய்த தவறை பற்றி திட்டிக் கொண்டிருந்தார்கள். இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது எழில், நீ நன்றாக படி. நல்ல வேலைக்கு போ. அப்புறம் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
உடனே ஈஸ்வரி- செழியன் இருவரும் எழிலை திட்டி இருந்தார்கள். கோபி, இனிமேல் உனக்கு போன் கிடையாது. எதுவாக இருந்தாலும் என்னுடைய நம்பரை கொடு என்று ரொம்ப கண்டிசனாக நடந்து கொண்டார். அதற்குப் பின் இனியா, தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ஆகாஷ் பற்றி பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அதற்கு பின் செல்வி, பாக்கியாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், பாக்கியா போன் எடுக்காமல் அமைதியாகவே இருக்க, செல்வி வருத்தப்பட்டார். அதற்குப்பின் எழிலிடம் பாக்கியா பேசினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ஆகாஷ- இனியா இதை செய்வார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஆகாஷ் அவன் வாழ்க்கையில் முன்னேறனும், இனியாவும் படித்து அவளுக்கென சுயமாக நிற்க வேண்டும். இதற்காக தான் நான் போராடினேன். தினமும் அவளுக்கு நிறைய அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால், அவள் எதற்காக இப்படி செய்தால் என புரியவில்லை என்று புலம்பி இருந்தார். மறுநாள் காலையில் இனியா வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசுகிறார். ஆனால், யாருமே முகம் கொடுத்து பேசவில்லை. செழியன் மோசமாக இனியாவை திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் பாக்யா கோபப்பட்ட பாக்கியா, செழியனை திட்டுகிறார். அதற்குப்பின் இனியா, பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு பேசுகிறார். அப்போது பாக்கியா, நீ உன் வாழ்க்கையில் முன்னேறனும். அதில் மட்டும் கவனம் செலுத்து. வேறு எதையும் பற்றியும் யோசிக்காதே. நன்றாக படி என்று சொன்னவுடன் இனியா, நான் படித்து முன்னேறுவேன் என்று தன்னுடைய அம்மாவிற்கு சத்தியம் செய்கிறார். அதற்கு பின் பாக்யா ரெஸ்டாரண்ட்க்கு கிளம்புகிறார். உடனே ஈஸ்வரி, வீட்டில் என்ன நடக்கிறது, நீ என்ன செய்கிறாய்? இனிமேல் எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. வீட்டில் தான் இருக்கணும் என்று ஆவேசமாக பாக்கியாவிடம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.