சுதாகர் சூழ்ச்சியில் சிக்கிய பாக்கியா குடும்பம், இனியா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் வீட்டில் ஈஸ்வரி, செழியன் இடம் இனியா திருமணத்தை பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார் கோபி. ஈஸ்வரிக்கும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, செழியன், கோபி மூவருமே இனியா திருமணத்தை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் பாக்கியாவிற்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபி, பெரிய குடும்பம். நல்ல சம்மந்தம், இனியா வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லி பேசி இருந்தார். அதற்கு பாக்கியா, இனியா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். அவளுடைய விருப்பம் தான் என்று சொல்ல, கோபத்தில் ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டிவிட்டு சொன்னார்.
உடனே கோபியும், இந்த திருமணம் நடக்கும் என்று சவால் விட்டு சென்றார். அதற்குப்பின் கோபி, இனியாவை தனியாக சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாப்பிள்ளையின் போட்டோவை காண்பித்து திருமணத்தைப் பற்றி கோபி சொன்னார். உடனே இனியா, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நான் மேற்கொண்டு படிக்கணும். என்னுடைய கேரியரில் சாதிக்கணும் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டில் தன் தந்தை சொன்னதை பற்றி பாக்கியாவிடம் சொன்னார் இனியா. அந்த சமயம் பார்த்து செழியன், உன்னால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, கோபியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு கோபி, எனக்கு மன அழுத்தத்தினால் நெஞ்சு வலிக்கிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, உன் கல்யாணத்தை நினைத்து தான் உன் அப்பா இந்த மாதிரி ஆனார் என்று சொன்னவுடன் இனியா தன் தந்தைக்காக திருமணத்திற்கு ஒத்து கொண்டார். இனியா தன்னைப் பெண் பார்க்கும் வரும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, அவரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
அடுத்த நாள் சுதாகர் வீட்டில் இருந்து இனியாவை பெண் பார்க்க வந்தார்கள். ஆனால், சுதாகர் வரவில்லை. அதற்கு பின் சுதாகர் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் பாக்யா, ஷாக் ஆனார். சுதாகரின் எண்ணத்தை பாக்கியா புரிந்து கொண்டார். ஆனால், வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் இனியாவையும், சுதாகரின் மகனையும் தனியாக பேச அனுப்பி வைத்தார்கள். அப்போது சுதாகரின் மகன் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், இனியா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அதற்கு பின் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்றார் சுதாகர் மகன்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர், எங்களுக்கு இனியவை பிடித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே யோசிக்கிறார்கள். உடனே பாக்கியா, அதற்குள் என்ன அவசரம்? பொறுமையாக செய்யலாம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று சொல்கிறார். பின் சுதாகர், திருமண செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். அதன் பின் வீட்டில் பாக்கியா, என்னுடைய ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்க நினைத்தார் சுதாகர். அது முடியாது என்று சொன்னவுடன் தான் இனியாவை பெண் கேட்டு வந்தார் என்றவுடன் ஈஸ்வரி- கோபி ஏற்றுக்கொள்ளவே இல்லை.
சீரியல் ட்ராக்:
அப்போது ஈஸ்வரி, இந்த திருமணம் நடந்தே தீரும் என்று சொல்கிறார். உடனே இனியா, நான் அவர்கள் வருவதற்கு தான் ஒத்துக்கொண்டேன். மற்றபடி எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் ஆகாஷை தான் காதலிக்கிறேன். அவன் கலெக்டர் ஆகுவதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் இனியவை கோபி தனியாக அழைத்து சென்று சுதாகர் குடும்பத்தை பற்றி பேசுகிறார். ஆனால், இனியா ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் ஆகாஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். இன்னொரு பாக்யா, வீட்டில் நடந்ததை பற்றி செல்வி இடம் சொல்லி புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.