சுதாகர் குடும்பத்தை பற்றி அடுக்கடுக்காக வெளிவந்த உண்மைகள், அதிர்ச்சியில் இனியா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, நான் பார்த்துக்கொள்கிறேன். பிரச்சனை என்றால் உங்களை அழைக்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருங்கள் என்று கோபிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். அதற்கு பின் இனியாவிடம் சுதாகர், ரொம்ப நன்றி இனியா. நிதிஷ் சீக்கிரமாகவே மாறிவிடுவான். இந்த வீட்டில் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொன்னார். அதற்கு இனியா எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப் பின் நிதிஷ் வீட்டிற்கு வந்தார். வழக்கம் போல் அவர் போதை பொருளை பயன்படுத்தி இருந்தார். இதை பார்த்த சுதாகர் பயங்கரமாக நிதிஷ் மீது கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய மகளின் வாழ்க்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
வீட்டிற்கு வந்த கோபி சரியாக யாரிடமும் பேசவில்லை. இதை பார்த்த பாக்கியாவிற்கு சந்தேகம் வந்தது. பின் பாக்கியா, இனியாவிற்கு ஏதாவது பிரச்சனையா? உங்களை ஏன் தனியாக சந்தித்து பேசினார் என்று கேட்டார். ஆனால், கோபி உண்மையை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்தார். மறுநாள் காலையில் இனியா வேலைக்கு கிளம்பினார். அப்போது நிதிஷ், பிறந்தநாள் பரிசு கொடுத்தார். இனியா அதை வாங்கிக்கொண்டு வேலைக்கு கிளம்பினார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த கோபி, இனியாவை நான் அழைத்து செல்கிறேன் என்றார். பின் வரும் வழியில் கோபி, ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார் அதற்கு இனியா, எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.
பாக்கியலட்சுமி:
இனியா, நிதிஷின் அப்பா எல்லோருமே என்னிடம் நன்றாக தான் நடந்து கொண்டார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இதே மாதிரி அம்மாவுடைய அம்மா ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் முகம் கொடுத்து கூட கேட்க மாட்டீர்கள். உங்கள் மகளுக்கு என்று பிரச்சினை வரும் போது தான் அந்த வலி புரிகிறதா? என்று கேட்டார். இனியா கேட்ட கேள்விக்கு கோபியால் பதில் சொல்லமுடியாது ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் இனியா, பாக்கியாவின் ஹோட்டலுக்கு வந்தார். அப்போது பாக்கியா, கடையை டெவலப் செய்வதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் சொல் என்று இனியாவிடம் கேட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
அதற்கு இனியா, பைவ் ஸ்டார் ஓட்டலில் மொத்தம் ஆறு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அதில் ஓரு ரெஸ்டாரண்ட் கான்ட்ராக்டில் விடுகிறார்கள். அந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் பாக்கியா முடியாது என்றார். ஆனால், இனியா தன்னுடைய அம்மாவை வலுக்கட்டாயமாக அந்த போட்டி நடத்தும் இடத்திற்கு அழைத்து சென்று பாக்கியாவின் பெயரைக் கொடுத்தார். அங்கு போட்டியை ஏற்பாடு செய்த மேனேஜர், இது ஒன்னும் வீட்டு சமையல் செய்யும் வேலை இல்லை. பெரிய பெரிய செப்புகள் கலந்து கொள்ளும் போட்டி என்று ஏளனமாக பேசி இருந்தார். இதை கேட்டு பாக்கியா, என்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசி விட்டு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ஈஸ்வரியை கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த கோபி, பாக்கியாவிடம் தன் மாமியாரை பற்றி நலம் விசாரிக்கிறார். இதைக் கேட்டவுடன் பாக்யாவிற்கு ஷாக். அதற்கு பின் பாக்கியா, இனியாவிற்கு ஃபோன் செய்து பேசுகிறார். அப்போது வீட்டில் சண்டை போடும் சத்தம் கேட்பதால் இனியா உடனே கீழே வந்து பார்க்கிறார். அங்கு நிதிஷ் பயங்கரமாக போதை பொருளை பயன்படுத்தி நிலை தடுமாறும் அளவிற்கு இருக்கிறார். இதனால் சுதாகர், நிதிஷையும் அவருடைய அம்மாவையும் பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது நிதிஷ் அம்மா, உங்களுக்கு பிறக்கவில்லை என்பதால் தானே இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். பணத்துக்காக நீங்கள் தான் எங்கள் இருவரையும் தேடி வந்தீர்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு இனியாவிற்கு அதிர்ச்சியாகிறது.
சீரியல் ட்ராக்:
பின் இனியா வந்திருப்பதை பார்த்தவுடன் சுதாகர், நிதிசை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ போய் தூங்கு என்று சொல்கிறார். இருந்தாலும் கேட்காமல் இனியா, நிதிஷ் ரூமிற்கு போகிறார். அங்கு நிதிஷ் நிலைமையை பார்த்து இனியாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கோபத்தில் நிதிஷ், இனியாவை கீழே தள்ளி விடுவதால் மண்டையில் அடிபடுகிறது. அந்த சமயம் பார்த்து சுதாகர் வந்து விடுகிறார். அவர்கள் இனியாவை வெளியே அனுப்பிவிட்டு நிதிஷை சமாதானம் செய்கிறார்கள். கோபத்தில் நிதிஷின் அம்மா, உங்களால்தான் இந்த நிலைமை. பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் மேல் இருந்த ஆசையால்தான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்தீர்கள். அதனால் தான் என் மகனுக்கு இந்த நிலைமை என்றெல்லாம் பல உண்மைகள் வெளியே வருகிறது .இதைக் கேட்டு இனியா அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகினார். இத்துடன் சீரியல் முடிகிறது.