நிதீஷ் அனுப்பிய நோட்டீஸ், கொந்தளித்து இனியா செய்த வேலை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 22/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மாத்தி மாத்தி கேள்வி கேட்பதால் அந்த நபரால் எதுவும் பேச முடியவில்லை. அப்போது இனியா, நீங்கள் எந்த மண்டபத்தை புக் செய்தீர்கள் என்று கேட்டார். அந்த நபருமே ஏதேதோ ஒரு மண்டபத்தின் பெயரை சொன்னார். உடனே செழியன் அந்த மண்டபத்தை சோசியல் மீடியாவில் தேடி பார்த்தார். ஆனால், அந்த நபர் சொன்ன பெயரில் மண்டபமே இல்லை. உடனே போலீஸ், உண்மையாலுமே உன் மகளுக்கு கல்யாணமா? என்று கேட்டு மிரட்டினார்கள். அந்த நபரால் எதுவுமே சொல்ல முடியாமல் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். அதற்குப்பின் போலீசுமே அந்த நபரை துரத்தி சென்றர்கள். பின் அந்த நபரை துரத்திக் கொண்டே கோபி- எழில் போனார்கள்.

அந்த நபர் கடைசியில் சுதாகரை சந்தித்து தான் நடந்ததை எல்லாம் சொல்லி பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த கோபி, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த கோபி, இவ்வளவு வேலை செய்தது சுதாகர் தான். சுதாகர் தான் இப்படி எல்லாம் நம் குடும்பத்தை பழிவாங்க செய்கிறான் என்று சொன்னவுடன் இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் இனியா, சுதாகரின் வீட்டிற்கு செல்ல கிளம்பினார். உடனே பாக்கியா, தடுத்து நிறுத்தி விவாகரத்து கேஸ் நடக்கப்போகிறது. இப்போது எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். அதற்குப்பின் இனியா, பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் இனியாவின் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கிளம்பி போனார்கள். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். அப்போது கோபி- பாக்கியா இருவருமே ஆறுதல் சொன்னார்கள். அதற்கு பின் கோர்ட்டுக்கு கோபி, பாக்கியா, இனியா, எழில் நான்கு பேரும் போனார்கள். அங்கு நிதிஷ், சுதாகர் இருவருமே வந்திருந்தார்கள். சுதாகர், பாக்கியாவிடம் பேச வந்தார். உடனே அங்கிருந்து இனியா சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

அப்போது இனியாவிடம் நிதீஷ், என்னை விவாகரத்து செய்துவிட்டு உன்னுடைய கள்ளக்காதலன் ஆகாசுடன் சேர்ந்து ஊர் சுற்ற நினைக்கிறாயா. அவனை தான் நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து பாக்கியா- கோபி இருவரும் வந்ததால் நிதீஷ் சென்று விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு கிளம்பி பாக்கியா குடும்பத்தினர் வந்தார்கள். அப்போது இனியா, நிதிஷ் தன்னிடம் மோசமாக பேசியதைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் இனியாவின் வீட்டிற்கு நோட்டீஸ் வருகிறது. அதில் நிதிஷ் உடைய குடும்பம், இனியா கேரக்டரை பற்றி ரொம்ப மோசமாக சொல்லி இருக்கிறார்கள். பின் இனியாவின் கள்ளக்காதலால் தான் தன் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானான் என்பதுபோல புகார் கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம் பார்த்து இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே கோபி, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீ கவலைப்படாதே என்று இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இருந்தாலுமே ஆத்திரம் தாங்காத இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று நிதீஷ் இடம்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். நிதிஷ், நிதிஷ் அம்மா, இனியா மூவருமே மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சுதாகர் வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி விடுகிறார். உடனே கோபி, பாக்கியாவிடம் தகவலை சொல்லிவிட்டு இனியாவை பார்க்க வருகிறார். அப்போது இனியா, நான் இதை சும்மா விடப்போவதில்லை. என்னை பற்றி அசிங்கப்படுத்தியவர்களை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் கத்திக் கொண்டிருக்கிறார். பின் அங்கு வந்த கோபி, இனியாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full