ஆகாஷுடன் பேசும் இனியா, கொந்தளித்த நிதீஷ், சப்போர்ட் செய்யும் பாக்கியா - பாக்கியலட்சுமி

By subhashini · 10/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஆபீஸில் இருந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன் என்று சொன்னதால் நிதீஷ் அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு பின் வீட்டிற்கு சென்ற இனியா, தன்னுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உண்மையை அறிந்து வீட்டிற்கு வந்த எழில், இனியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதோடு நிதீஷை சும்மா விடக்கூடாது என்றெல்லாம் கோபப்பட்டார். செழியன்- எழில் இருவருமே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பதை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் பாக்கியா, இப்போதைக்கு வேண்டாம் என்றார். அப்போது இனியா, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.

நான் நிதீசை விவாகரத்து செய்யப் போகிறேன். இதில் எனக்கு யாரும் தடை சொல்ல வேண்டாம் என்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே இனியா விவாகரத்து செய்வதற்கு ஒத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் பாக்கியாவிடம் இனியா, நிதீஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். ஆனால், நான் அவரை பார்க்கவில்லை என்றார். அதற்கு பாக்கியா, நீ எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். எப்போதும் நான் உன்னுடன் தான் இருப்பேன் என்று சொன்னார். பின் இனியா, தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கழட்டி இதற்கு எந்த வேலையும் இல்லை. நிதீஷ் என் வாழ்க்கையை விட்டு எடுத்து விட்டேன் என்று பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஜாமினில் வெளியே வந்த நிதிஷ், இனியா ஆஃபீஸ்க்கு சென்று பிரச்சனை செய்தார் என்றார். இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே கோபப்பட்டார்கள். உடனே கோபி, நான் சுதாகரிடம் சந்தித்து பேசுகிறேன் என்றார். அதற்குப்பின் இந்த விஷயம் எல்லாம் தெரிந்து கொண்டு ஏன் அமைதியாக இருந்தாய். இப்படியே காலமெல்லாம் வாழ்ந்துவிடலாம் என்று நினைத்தாயா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு இனியா எமோஷனலாக அழுதார். அதற்குப்பின் கோபி, செழியன், எழில் மூவருமே சுதாகர் வீட்டிற்கு போனார்கள். அப்போது கோபி, என் மகளிடம் இனிமேல் நிதீஷ் பேச நினைத்தால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே கோபப்பட்ட நிதிஷ், அப்படி தான் பேசுவேன். என்ன செய்ய முடியுமோ பண்ணுங்கள் என்று திமிராக பேசி இருந்தார். இதனால் செழியன், எழில் இருவருமே சண்டை போட்டார்கள். பின் சுதாகர், மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று மிரட்டி இருந்தார். கோபியுமே சுதாகருக்கு பதிலடி கொடுத்துவிட்டு வந்தார். அதற்குப் பின் சுதாகர், பாக்கியாவின் ஓட்டலுக்கு போனார். அங்கு சுதாகர்-பாக்கியா இருவரும் என்று சண்டை போட்டார்கள். அந்த சமயம் வந்த கவுன்சிலர், சுதாகரை திட்டி இருந்தார். இது எல்லாம் பார்த்து சுதாகருக்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாக்கியா, சுதாகரின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டீர்களா? என்று கேட்கிறார். அதற்கு கோபி, நிதிஷ் ரொம்ப தவறாக பேசினான். அதனால்தான் நம்ம பிள்ளைகள் சண்டை போட்டார்கள் என்று சொல்கிறார். உடனே இனியா, இதற்கெல்லாம் ஒரே முடிவு விவாகரத்து தான். நான் நிதீஷை விவாகரத்து செய்தால் தான் அவர் அவரிடம் அவரிடம் எந்த அவர் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவிற்கு விவாகரத்து வாங்க முடிவெடுத்தார்கள். அதற்குப்பின் இனியா, கோபி, பாக்கியா எல்லோருமே வக்கீலை சந்தித்து பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது கோபி நடந்த எல்லா விஷயத்தையும் வக்கீல் இடம் சொல்கிறார். அதற்கு வக்கீல், எல்லாத்தையும் ஸ்டேட்மெண்டாக எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதற்கு இனியா, நானே எழுதி உங்களுக்கு மெயில் பண்ணி விடுகிறேன் என்கிறார். அதற்குப்பின் பாக்கியா ஹோட்டலில் செல்வி, இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதற்கு பின் அங்கு வந்த ஆகாசிடம் இனியா எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த நிதீஷ், ஆகாஷ்-இனியா இருவரும் பேசுவதை பார்த்து ரொம்பவே கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full