சுதாகரின் குடும்பத்தால் சித்திரவதைப்படும் இனியா, கோபி என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி

By subhashini · 6/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, பாக்கியா அடிமட்டத்திலிருந்து வந்தவள். அவள் இந்த நிலைமைக்கு காரணமும் நான் தான். அதனால் ஓட்டல் எல்லாம் மூட முடியாது என்று சொன்னவுடன் சுதாகர் எதுவுமே பேச முடியவில்லை. கோபி சொன்னதற்கு சம்மதித்தார். பின் இனியா வேலைக்கு செல்வதை பற்றி கோபி பேசி இருந்தார். உடனே சுதாகர், வேலைக்கெல்லாம் போக தேவையில்லை. அப்படி செய்வதாக இருந்தால் வேறொரு வேலையை செய்யட்டும் என்று சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் இனியா தன்னுடைய அம்மாவிற்காக உதவி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆகாசிடம் இனியா நலம் விசாரித்தார். அந்த சமயம் பார்த்து நிதிஷ் வந்து விட்டார். நிதிஷ் எதுவும் சொல்லாமல் இனியாவை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார். அதற்குப்பின் பாக்கியாவின் ஓட்டலுக்கு வழக்கம் போல் வம்பு இழுக்க கவுன்சிலர் வந்தார். உடனே பாக்கியா, அமைச்சர் இடம் பேசுவது போல் போனில் டிராமா செய்தார். இதைக் கேட்டவுடன் கவுன்சிலர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி விட்டார். கடைசியில் இனியா, நிதிஷ் இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிதிஷ், ஆகாஷை பற்றி கேட்டார்ர். இனியாவால் எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார். நிதிஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தானே என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் நிதீஷ், அவன் உன்னுடைய எக்ஸ் தான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். உனக்கு என்ன அவனோட பேச்சு? நீங்கள் வெளியே எல்லாம் சுத்தி இருக்கீங்களா? என்று ரொம்ப மோசமாக கேள்வி கேட்டார். இனியா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் இனி அவனுடன் பேசவும் இல்லை என்று சொன்னார். இருந்தாலுமே விடாமல் நிதிஷ், இனியாவை நோண்டி நோண்டி கேள்விப்பட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இனியா தூங்கி விட்டார். ஆனால், நிதிஷ் ஒரு சைக்கோ மாதிரி இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இனியா காதல் விஷயத்தைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருந்தார்.

நேற்று எபிசோட்:

மறுநாள் காலையில் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் நிதிஷ் சொல்லி விட்டார். வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இனியாவும் அவர்களுடன் சகஜமாக பேசப்போனார். ஆனால், யாருமே பேசவில்லை. அவளுக்கு சாப்பாடும் போடவில்லை. ஒரு கட்டத்தில் நிதிஷின் அம்மா, நீ நல்ல பொண்ணு என்று நினைத்து தான் உன்னை திருமணம் செய்து வைத்தோம். ஆனால். நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் குடும்பம் எங்களை மொத்தமாக ஏமாற்றி விட்டது என்று கோபப்பட்டார். உடனே சுதாகர், தன் மனைவியை அமைதியாக இருக்க சொன்னார். பின் இனியா அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எபிசோட்டில் இனியா, தன்னுடைய அம்மாவை பார்க்க ஹோட்டலுக்கு வருகிறார். இனியாவின் முகம் வாடி போய் இருக்கிறது. இதை பார்த்து பாக்கியா, இனியாவிடம் விசாரிக்கிறார். ஆனால், இனியாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை. கண்கலங்கி அழுகிறார். பின் இனியா, உண்மையை சொல்லாமல் ரெஸ்டாரன்ட் விஷயத்தால் தான் கஷ்டமாக இருக்கிறேன் என்று பொய் சொல்கிறார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். வீட்டிற்கு வந்த இனியாவிடம் நிதிஷ், ஆகாஷை பார்க்க போனாயா? எதற்காக உங்க அம்மா ஓட்டலுக்கு போகிறாய்? என்று ரொம்ப மோசமாக அவரிடம் சந்தேகப்பட்டு சண்டை வாங்கினார்.

சீரியல் ட்ராக்:

இதனால் இனியா ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பின் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். மறுநாள் காலையில் சுதாகர் வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த கோபி, இனியாவை அழைத்து போகிறார். அப்போது இனியா,
எதற்கு இந்த திருமணம் எனக்கு செய்து வைத்தீர்கள். ஆகாஷை காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே நிதிஷ் என்னிடம் நடந்து கொள்ளும் விதமே சரியில்லை. வீட்டில் எல்லோரிடமே சொல்லிவிட்டார். யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. என்னை நடத்தும் விதமும் வேறு மாதிரி இருக்கிறது என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். இதை கேட்டு கோபி ஷாக் ஆகிறார். பின் கோபி, எப்படியாவது உன்னுடைய வாழ்க்கையை சரி செய்கிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full