இனியா எடுத்த அதிரடி முடிவு, பாக்கியா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது கோபி, நான் தான் ஒழுங்காக விசாரிக்காமல் இனியாவை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் முன்பு பேசினது ஒரு மாதிரியாக இருக்கு இப்போ வேற மாதிரி பேசி இருந்தார்கள். அவருடைய சுயரூபமே இப்போ வெளியே வந்தது. நான் அவர்களை சும்மா விட போவதில்லை என்று கத்தினார். பின் பாக்கியா, என் மகள் இங்கேயே இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு இனியா, நான் நிதிஷ் உடன் கொஞ்ச நாள் கூட சந்தோசமாக வாழவில்லை. அந்த வீட்டில் ஏதோ சிறையில் இருந்தது போல இருக்கிறது என்றார்.
இன்னொரு பக்கம் சுதாகர், எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லை என்றால் தேவையில்லாமல் அவருடைய அப்பா, அம்மா நம் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பார்கள் என்று சொன்னார். ஆனால், நிதிஷின் அம்மாவிற்கு இனியாவை அழைத்து வருவதில் விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே மனம் விட்டு ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா நன்றாக இருக்கிறாளா? என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியின் நிலைமையை நினைத்து வேதனையில் இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா, நான் நிதிஷை விவாகரத்து செய்ய இருக்கிறேன். அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது சுதாகரிடம் இருந்து வாங்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவுக்கு சப்போர்ட் செய்தார்கள். அதற்குப் பின் இனியா வேலைக்கு தயாராகிக் கிளம்பி இருந்த்தார். அப்போது பாக்கியா வீட்டிற்கு சுதாகரும் அவருடைய மனைவியும் வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்கள். சுதாகர், நான் இனியாவை அழைத்து செல்ல வந்தேன் என்று சொன்னார். இதனால் கோபப்பட்ட கோபி, அதெல்லாம் முடியாது.
நேற்று எபிசோட்:
பொய் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டீர்கள். இனிமேல் இனியா அங்கு வர வாய்ப்பில்லை என்று கோபப்பட்டு பேசி இருந்தார்கள். சுதாகர்- பாக்கியா குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் இனியாவை அனுப்ப முடியாது என்பதால் சுதாகரால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் நிதிசை சுதாகர் வெளியே எடுத்து விட்டார். அப்போது சுதாகர், நீ எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லையென்றால் நமக்கு தான் பிரச்சனை என்பதால் நிதிஷ் இனியாவை தேடி ஆபீஸ்க்கு போனார். ஆனால், இனியா, நிதிஷை சந்திக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் நிதிஷ் ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஆபீஸில் இருந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன் என்று சொன்னதால் நிதீஷ் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்கு பின் வீட்டிற்கு சென்ற இனியா, தன்னுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உண்மையை அறிந்து வீட்டிற்கு வந்த எழில், இனியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார். அதோடு நிதீஷை சும்மா விடக்கூடாது என்றெல்லாம் கோபப்படுகிறார். செழியன்- எழில் இருவருமே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பதை பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாக்கியா, இப்போதைக்கு வேண்டாம் என்கிறார். அப்போது இனியா, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.
சீரியல் ட்ராக்:
நான் நிதீசை விவாகரத்து செய்யப் போகிறேன். இதில் எனக்கு யாரும் தடை சொல்ல வேண்டாம் என்றவுடன் ஈஸ்வரிக்கு கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே இனியா விவாகரத்து செய்வதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். அதற்குப்பின் பாக்கியாவிடம் இனியா, நிதீஷ் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். ஆனால், நான் அவரை பார்க்கவில்லை என்கிறார். அதற்கு பாக்கியா, நீ எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். எப்போதும் நான் உன்னுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறார். பின் இனியா, தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கழட்டி இதற்கு எந்த வேலையும் இல்லை. நிதீஷ் என் வாழ்க்கையை விட்டு எடுத்து விட்டேன் என்று பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது