நடன போட்டியில் வென்று இனியா செய்த வேலை, மனம் உடைந்த பாக்யா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். கல்லூரியில் நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யாவும் ஒத்துக் கொண்டு நடனம் மாஸ்டரை சந்திகத்தார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா ஒத்து கொள்ளவில்லை. ஆனால், இனியா ரொம்ப கெஞ்சியும் பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் செழியன் சொன்ன தயாரிப்பாளரை சந்திக்க எழிலும் அவருடைய நண்பரும் சென்று இருந்தார்கள்.
அப்போது எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல அவரும் ஒத்துக்கொண்டார். இதை எழில், அமிர்தாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். பின் இதை இருவரும் பாக்யாவிடம் சொல்ல, அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் அமிர்தா, நானும் ரெஸ்டாரண்டுக்கு வரேன் என்று சொல்ல, பாக்கியா ஒத்துக் கொண்டார். நேற்று எபிசோட்டில் வீட்டின் சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைத்தார் பாக்யா. ஆனால், இனியா ஒத்துக்கொள்ளவில்லை.
பாக்கியலட்சுமி:
கடைசியில் டான்ஸ் கிளாஸில் சேர்த்து விட முடியாது என்று பாக்கியா சொல்வதால் இனியா வருத்தப்பட்டு, தன்னுடைய அப்பா கோபியிடம் சொன்னார். உடனே அவர் வகுப்பில் சேர்த்து விடுவதாக வாக்குறுதி கொடுக்க, இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், இதைக் கேட்ட ராதிகா, பாக்கியாவை பழிவாங்க தான் இப்படி எல்லாம் செய்கிறாய் என்று கேட்க, ஏதேதோ காரணம் சொல்லி கோபி சமாளித்தார். மறுநாள் கோபி, டான்ஸ் மாஸ்டரிம் பேசி இனியாவை கிளாஸில் சேர்ந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் எடுப்பதை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போ அந்த புது செப்பையும் வரவைத்து ஆர்டரை எடுக்கலாம் என்று பாக்கியா சொல்ல, எனக்கு அவர் மீதும், கோபி மீதும் தான் சந்தேகமாக இருக்கிறது. அவர் வேண்டாம் என்கிறார். ஆனால், பாக்கியா அதை நம்பவில்லை. மறுபடியும் அவர் வேலைக்கு வந்து சேர்கிறார். இவர்களும் புதிய ஆர்டர் எடுக்க தயாராகிறார்கள். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய புது தயாரிப்பாளரை சந்தித்து கதையை பற்றி பேசுகிறார் .
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் ஒழிந்து நின்று கோபி கேட்டு சந்தோஷப்படுகிறார். எழில் சென்ற பின் கோபி தயாரிப்பாளரை சந்தித்து பேசும்போது, நீங்கள் இதை உங்கள் மகனிடம் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டதற்கு, மனதுக்குள்ளையே சொல்லும் நேரம் வந்தவுடன் பாக்யா முகத்திரையை கிழிப்பேன் என்று பேசிக்கொள்கிறார் கோபி. பின் தன்னுடைய மகள் கல்லூரிக்கு சென்று நடன வகுப்பை பற்றி கோபி விசாரிக்கிறார். இனியாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் வீட்டில் இனியா நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி, பாக்யா வியப்பாக பார்க்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=_MNAV0DG_64
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனியா கல்லூரியில் காம்பிடிஷன் நடைபெறுகிறது. அதில் எல்லோருமே சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள். கோபியும் உற்சாகத்தில் கீழே இருந்தே நடனம் ஆடினார். கடைசியில் இனியா தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கிறார்கள். இதைக் கேட்டு பாக்கியா ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது இனியா, தன்னுடைய அப்பாவை மட்டும் மேடைக்கு அழைத்து சென்று, இந்த வெற்றிக்கு காரணம் என் அப்பா தான் என்று புகழ்ந்து பேசுகிறார். வேதனையில் பாக்கிய எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு செல்கிறார். இதை பார்த்து கோபி உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார்.