நடன பயிற்சிக்கு அனுமதி தர மறுத்த பாக்கியா, இனியா எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் ரெஸ்டாரண்ட் சர்ச்சையால் பாக்கியா மனம் உடைந்து விட்டார். இன்னொரு பக்கம் செழியனுக்கு வேலை போய் விட்டது. அதேபோல் சினிமா வாய்ப்பை தேடி எழில் அலைந்து திரிகிறார். இந்த வாரம் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்தார். அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்டு ரெடி பண்ணார். ஆனால், அதற்குள் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள். இதனால் போலீஸ் வந்து பாக்கியாவுக்கு வார்னிங் கொடுத்தது.
மேலும், பாக்கியா சொன்ன இடத்திலிருந்து பணம் வந்து ஒரு வழியாக எல்லோருக்குமே பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க இன்னும் திட்டம் போடுகிறார். அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அதற்கு அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார். பின் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று செழியன் வருத்தப்பட்டு பேச, பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். எல்லா பிரச்சனையும் முடித்து விட்டு எப்படியாவது ரெஸ்டாரண்டை திறக்க வேண்டும் என்று பாக்கியா-செல்வி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடன பயிற்சி மும்முரமாக நடக்கிறது. டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று கல்லூரியில் சொல்வதால் இனியா வருத்தப்பட்டார். அதற்குப்பின் செழியன், எழிலை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி அழுது புலம்பி இருந்தார். இதை பார்த்த கோபி, செழியனிடம் விசாரித்தார். முதலில் உனக்கு வேலையை ரெடி பண்ணலாம். அதற்குப் பிறகு எழிலை பார்க்கலாம் என்று ஏதோ சொல்லி சமாளித்தார் கோபி. நேற்று எபிசோட்டில் தன்னுடைய கல்லூரியில் நடன வகுப்பிற்காக மாஸ்டர் வேண்டும். அவரை வைத்து தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னதாக இனியா பாக்யாவிடம் சொல்ல, அவர் ஒத்து கொள்ளவில்லை.
நேற்று எபிசோட்:
பின் கல்லூரியில் இனியா சொன்ன காரணத்தை அவர் ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நீ எப்படியாவது மாஸ்டரை ரெடி பண்ணி ஆட வேண்டும் என்று சொன்னவுடன் இனியா ரொம்ப வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் கோபியை சந்திக்க ஒருவர் வந்தார். அவர் புது படம் எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்க, என்னுடைய மகன் கதை வைத்திருக்கிறான். அதைக் கேட்டு உங்களுக்கு பிடித்தால் எடுங்கள் என்று சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். இதை எல்லாம் வீட்டில் ராதிகாவிடம் சொல்லி கோபி சந்தோஷப்பட, ராதிகா அதை கண்டுகொள்ளாமல் தூங்கி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, எழிலுக்காக தயாரிப்பாளரை சந்தித்த விஷயத்தை செழியன் இடம் சொல்கிறார். இதைக் கேட்டு செழியன் ரொம்ப சந்தோஷப்பட்டு, தன்னுடைய அப்பாவை பெருமையாக பேசுகிறார். இது நான் தான் செய்தேன் என்று சொல்லாதே என்பதற்கு செழியன் ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். வியாபாரம் ஆகுமா? என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் கல்லூரியில் வர சொன்னதால் பாக்கியா சென்றிருந்தார். அப்போது நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னதால் பாக்யாவும் ஒத்துக் கொண்டு நடனம் மாஸ்டரை சந்திக்கிறார். ஆனால், அவர் அதிகமாக செலவாகும் என்று சொன்னதால் பாக்கியா வந்து விடுகிறார். வகுப்பில் சேர்த்துவிட சொல்லி இனியா ரொம்ப கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதை பார்த்த கோபி இனியாவிடம் பேச நினைக்கிறார். ஆனால், ராதிகா தடுத்து விட்டதால் அவர் அமைதியாக விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.