திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கோபி போடும் நாடகம், இனியா முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 4/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, கோபியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு கோபி, எனக்கு மன அழுத்தத்தினால் நெஞ்சு வலிக்கிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, உன் கல்யாணத்தை நினைத்து தான் உன் அப்பா இந்த மாதிரி ஆனார் என்று சொன்னவுடன் இனியா தன் தந்தைக்காக திருமணத்திற்கு ஒத்து கொண்டார். இனியா தன்னைப் பெண் பார்க்கும் வரும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, அவரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக இருந்தார்.

அடுத்த நாள் சுதாகர் வீட்டில் இருந்து இனியாவை பெண் பார்க்க வந்தார்கள். ஆனால், சுதாகர் வரவில்லை. அதற்கு பின் சுதாகர் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் பாக்யா, ஷாக் ஆனார். சுதாகரின் எண்ணத்தை பாக்கியா புரிந்து கொண்டார். ஆனால், வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் இனியாவையும், சுதாகரின் மகனையும் தனியாக பேச அனுப்பி வைத்தார்கள். அப்போது சுதாகரின் மகன் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால், இனியா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அதற்கு பின் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்றார் சுதாகர் மகன்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் சுதாகர், எங்களுக்கு இனியவை பிடித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே யோசித்தார்கள். உடனே பாக்கியா, அதற்குள் என்ன அவசரம்? பொறுமையாக செய்யலாம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று சொன்னார். பின் சுதாகர், திருமண செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். அதன் பின் வீட்டில் பாக்கியா, என்னுடைய ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்க நினைத்தார் சுதாகர்.

நேற்று எபிசோட்:

அது முடியாது என்று சொன்னவுடன் தான் இனியாவை பெண் கேட்டு வந்தார் என்றவுடன் ஈஸ்வரி- கோபி ஏற்றுக்கொள்ளவே இல்லை. அப்போது ஈஸ்வரி, இந்த திருமணம் நடந்தே தீரும் என்று சொன்னார். உடனே இனியா, நான் அவர்கள் வருவதற்கு தான் ஒத்துக்கொண்டேன். மற்றபடி எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் ஆகாஷை தான் காதலிக்கிறேன். அவன் கலெக்டர் ஆகுவதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். பின் இனியவை கோபி தனியாக அழைத்து சென்று சுதாகர் குடும்பத்தை பற்றி பேசி இருந்தார். ஆனால், இனியா ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் ஆகாஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். இன்னொரு பாக்யா, வீட்டில் நடந்ததை பற்றி செல்வி இடம் சொல்லி புலம்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செல்வி, ஆகாஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செல்வி, இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். நீ அவளை மறந்துவிடு. தேவையில்லாமல் ஆசைப்படாதே. உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வேலைக்கு போற வழியை பாரு என்று சொன்னவுடன் ஆகாஷ் ரொம்பவே மனமுடைந்து விடுகிறார். பின் இனியவை நினைத்து அழுகிறார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா, நீ திருமணத்தைப் பற்றி எல்லாம் யோசிக்காதே, தைரியமாக இரு என்று ஆறுதல் சொல்கிறார். உடனே இனியா, நான் படிக்கணும்.

சீரியல் ட்ராக்:

ஆகாஷ் கண்டிப்பாக கலெக்டர் ஆகுவான் என்று சொன்னவுடன் பாக்கியா, நீ உன்னுடைய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்து என்று சொல்கிறார். மறுநாள் காலையில் செழியன், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலில் இருக்கிறார். இனியாவை வர சொல்கிறார் என்று சொன்னவுடன் பாக்கியா,
இது உங்க அப்பா போடும் நாடகம் என்று சொல்கிறார். பின் ஹாஸ்பிடலுக்கு சென்ற இனியாவிடம் கோபி, நான் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியவில்லை. இது நல்ல சம்மந்தம். தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக் கொள். எனக்கு உன்னுடைய வாழ்க்கை நினைத்துதான் கவலையாக இருக்கிறது. நீ சம்மதம் சொன்னால் அதில் நான் பாதி குணமாகி விடுவேன் என்று என்னென்னவோ சொல்கிறார். ஆனால், இனியாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full