கல்லூரியில் இனியாவுக்கு போட்ட கண்டிஷன், மகனுக்காக கோபி செய்த வேலை- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்ததால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். பின் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார். இன்னொரு பக்கம் செழியனுக்கு வேலை போய் விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அழுது புலம்பி இருந்தார். அதேபோல் சினிமா வாய்ப்பை தேடி எழில் அலைந்து திரிகிறார்.
இந்த வாரம் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்தார். அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்டு ரெடி பண்ணார். அதோடு பாக்யாவிற்கு மாத்தி மாத்தி போன் செய்து பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து இருந்தார்கள். ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதை அறிந்த பாக்யா,எல்லோரையும் சமாதானப்படுத்தி இருந்தார். ஆனால், அவர்கள் யாருமே கேட்கவில்லை. கடைசியில் போலீஸ் வந்து பாக்கியாவுக்கு வார்னிங் கொடுத்தது.
பாக்கியலட்சுமி சீரியல்:
மேலும், பாக்கியா சொன்ன இடத்திலிருந்து பணம் வந்தது. ஒரு வழியாக எல்லோருக்குமே பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க இன்னும் திட்டம் போடுகிறார். அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அதற்கு அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார். இதை அறிந்த கோபி நண்பர் திட்டி இருந்தார். இருந்தாலும், கோபி கேட்காமல் பாக்யாவை ஒழிக்க வேண்டும் என்று மீண்டும் வன்மத்தை கொட்டி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று செழியன் வருத்தப்பட்டு பேச, பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். எல்லா பிரச்சனையும் முடித்து விட்டு எப்படியாவது ரெஸ்டாரண்டை திறக்க வேண்டும் என்று பாக்கியா-செல்வி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா கல்லூரியில் நடன பயிற்சி மும்முரமாக நடக்கிறது. டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று கல்லூரியில் சொல்வதால் இனியா வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் செழியன், எழிலை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி அழுது புலம்பி இருந்தார். இதை பார்த்த கோபி, செழியனிடம் விசாரித்தார். முதலில் உனக்கு வேலையை ரெடி பண்ணலாம். அதற்குப் பிறகு எழிலை பார்க்கலாம் என்று ஏதோ சொல்லி சமாளித்தார் கோபி. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய கல்லூரியில் நடன வகுப்பிற்காக மாஸ்டர் வேண்டும். அவரை வைத்து தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னதாக இனியா பாக்யாவிடம் சொல்ல, அவர் ஒத்து கொள்ளவில்லை.
சீரியல் ட்ராக்:
பின் கல்லூரியில் இனியா சொன்ன காரணத்தை அவர் ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நீ எப்படியாவது மாஸ்டரை ரெடி பண்ணி ஆட வேண்டும் என்று சொன்னவுடன் இனியா ரொம்ப வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் கோபியை சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் படத்தை எடுப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்க, என்னுடைய மகன் கதை வைத்திருக்கிறான். அதைக் கேட்டு உங்களுக்கு பிடித்தால் எடுங்கள் என்று சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். இதை எல்லாம் வீட்டில் ராதிகாவிடம் சொல்லி கோபி சந்தோஷப்பட்டு, இந்த உலகத்திலேயே நான் தான் சிறந்த அப்பா என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், ராதிகா அதை கண்டுகொள்ளாமல் தூங்கி விட்டார்.