ராதிகாவிடம் பேச நினைக்கும் ஈஸ்வரி, நிதிஷின் சுயரூபம் இனியாவிற்கு தெரியவருமா? - பாக்கியலட்சுமி

By subhashini · 16/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, வேலை முடித்துவிட்டு சுதாகர் வீட்டின் கதவை தட்டுகிறார். ஆனால், யாருமே திறக்கவில்லை. நிதிஷுக்கு போன் செய்துமே அவர் எடுக்கவில்லை. இனியா வெளியில் இருப்பது தெரிந்தும் நிதிஷ் வேண்டும் என்று கதவை திறக்காமல் உள்ளே இருந்தார். இதனால் இனியா தன்னுடைய அம்மாவின் ஹோட்டலுக்கு சென்று விட்டார். அங்கு வேலையை முடித்துவிட்டு இனியாவும் அவருடைய அம்மாவும் வீட்டிற்கு போனார்கள். அப்போது ஈஸ்வரி, என்ன பிரச்சனை? இந்நேரத்திற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். இனியா, ஒன்றுமில்லை சும்மாதான் வந்தேன். உங்களை எல்லாம் பார்க்கணும் போல் இருந்தது என்று ஏதோ சொல்லி சமாளித்துவிட்டார்.

அப்போது கோபிக்கு போன் செய்த சுதாகர், இனியா அங்கு இருக்கிறாளா? இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னார். உடனே கோபி, இனியா இங்குதான் இருக்கிறார். உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்க, எங்களிடம் எதுவுமே சொல்லாமல் அங்கு வந்து விட்டார். எதுவாக இருந்தாலும் சொல்லிட்டு செய்யணும் என்று சுதாகர் கோபப்பட்டார். பின் கோபி, அதைப் பற்றி இனியாவிடம் கேட்க ரூமிற்கு போனார். ஆனால், அங்கு பாக்கியா- இனியா இருவருமே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்ததை பற்றி ஈஸ்வரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பாக்கியலட்சுமி:

கோபி, வீட்டில் சொல்லாத வந்ததை பற்றி விசாரித்தார். அதற்கு இனியா, நான் நிதீஷுக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. இதை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் தான் நான் சொல்லவில்லை என்று சொன்னார். அதற்குப்பின் இனியாவை அழைத்துக் கொண்டு பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சுதாகரின் வீட்டிற்கு சொன்னார்கள். அங்கு ஈஸ்வரி, கோபி இருவருமே இனியா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்கள். சுதாகர், அதெல்லாம் தேவையில்லை. இனிமேல் எங்கு சென்றாலும் சொல்லிட்டு போகட்டும் என்று சொன்னார். அப்போது நிதிஷின் அம்மா, உங்கள் இருவருடைய உறவு பற்றி எனக்கு புரியவே இல்லை.

கடந்த வாரம் எபிசோட்:

விவாகரத்து ஆகியும் எப்படி இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே பாக்கியா, நாங்கள் தனி தனி வீட்டில் தான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஒன்றும் இல்லை. நீங்கள் தேவையில்லாத யோசிக்க வேண்டாம் என்று சொன்னார். அதற்குப்பின் இனியாவிடம் சுதாகர், ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்க, அதற்கு இனியா நடந்ததை சொன்னார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பாக்கியா- கோபி இருவரிடமே மீண்டும் திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசி இருந்தார். கோபி முடியாது என்று அங்கு இருந்து கிளம்பி வந்தார். பாக்கியா, முடிந்துபோன விஷயத்தை பேசாதீர்கள். உங்கள் மகனுக்கு நீங்கள் வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய கடையில் பாடுபவர்களுக்கு 30% டிஸ்கவுண்ட் என்று போஸ்டர் ஒட்டுகிறார். இதைப்பற்றி தன் மகளிடம் சொல்லியும் சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி- ராதிகாவை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக ராதிகாவிற்கு ஃபோன் செய்து பேசுகிறார். ராதிகா, நான் சென்னைக்கு தான் ஒரு வேலை விஷயமாக வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, நான் சந்திக்கலாமா? உன்னிடம் பேச வேண்டும் என்கிறார். அதற்கு ராதிகாவும் ஒற்றுக்கொள்கிறார். இன்னொரு பக்கம் ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர் போஸ்டரை பார்த்து நாங்கள் நன்றாக பாடுவோம் என்று அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பாக்கியா கோபப்படாமல் சூப்பராக இருக்கிறதுஎன்று சொல்லி சாப்பாடு போட்டு டிஸ்கவுண்ட் செய்து மீதி பணத்தை கொடுக்கிறார். கவுன்சிலரால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து சென்று விடுகிறார்.
இன்னொரு பக்கம் நிதீஷ் போதைக்கு அடிமையாகி பைத்தியம் பிடித்தவன் போல் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார். இனியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் நிதிஷின் அம்மா சுதாகரிடம் பழையபடி அவன் அந்த பழக்கத்திற்கு சென்று விட்டான். பயமாக இருக்கிறது என்று புலம்புகிறார். சுதாகர், நான் பார்த்து கொள்கிறேன் என்று ரூமிற்கு போனார். பின் இனியா, அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்கிறார். சுதாகர், ஏதோ சொல்லி சமாளிக்கிறார். கடைசியில் ஈஸ்வரி, ராதிகாவை சந்திப்பதற்காக வெளியே கிளம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full