பார்ட்டியில் நடந்த கலவரம், இனியாவை தேடி அலையும் செழியன், பயத்தில் இருக்கும் பாக்கியா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்ததால் கர்ப்பம் கலைந்து விட்டது.
இதனால் கோபமடைந்த ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். பின் கோபி, தன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். இதனால் ஈஸ்வரி மனமுடைந்து விட்டார். இந்த நேரத்தில் ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்தது. மேலும், நீதிமன்றத்தில் எல்லா பக்கமும் ஈஸ்வரிக்கு எதிராக இருந்ததால் ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைத்து இருந்தார்கள். அப்போது பார்க்கில் இருந்த மையூ, என்னுடைய அம்மா பூ ஜாடி தடிக்கி தான் கீழே விழுந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்ற சென்றதை நான் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி ஆகி இருந்தார். பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்தது. மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. பின் ராதிகா, கமலா மீது கோபப்பட்டு பேசி இருந்தார். கடைசியில் கமலா வீட்டை விற்று சென்று விட்டார். பின் கோபி, தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் மனம் விட்டு அழுது மன்னிப்பு கேட்டார். ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை.
ஈஸ்வரி செய்த செயல்:
எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். பின் ராதிகா வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருந்தார். ராதிகா, நான் தெரியாமல் செய்து விட்டேன். சாரி என்று கேட்டும் கோபி தன் அம்மாவை நினைத்து புலம்பி அழுது கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடக்கிறது. அதில் பாக்கியா-கோபி இருவரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சமையல் போட்டி:
அப்போது கோபி, நான் தான் வெற்றி பெறுவேன் என்று பாக்கியாவிடம் சவால் விடுகிறார். பின் சமையல் போட்டியும் மும்முரமாக நடைபெற்றது. இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இனியா இருக்கிறார். மேலும், நேற்று நடந்த சமையல் டாஸ்க்கில் கோபி தான் வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாக்கியா- கோபி இருவருமே மும்மரமாக அடுத்த டாஸ்க்காக சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
அப்போது இனியா போன் எடுக்கவில்லை என்ற பதட்டத்தில் செழியனிடம் சொல்கிறார் பாக்கியா. பின் செழியன், இனியா பிரண்டு வீட்டிற்கு சென்று தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், பார்ட்டியில் இனியா தன்னுடைய நண்பர்களுடன் இருக்கிறார். அப்போது நண்பர்களுக்குள் இடையில் சண்டை வந்ததால் பார்ட்டி நடத்தும் இடத்தின் உரிமையாளர் போலீசில் தகவலை சொல்லி விடுகிறார். போலீஸ் வரும் வரை யாரும் இங்கிருந்து செல்லக்கூடாது என்றவுடன் இனியா ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, இனியவை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இனி வரும் நாட்களில் இனியா நிலைமை பாக்கியாவிற்கு தெரிய வருமா? செழியன் என்ன செய்யப் போகிறார்? சமையல் போட்டியில் பாக்கியா வெற்றி பெறுவாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.