ராதிகா அம்மா செய்த சூழ்ச்சியால் கைதாகும் ஈஸ்வரி, அதிர்ச்சியில் கோபி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.
விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டினார்கள். ஈஸ்வரிக்கு, ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொன்னார். இறுதியில் கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
கடந்த சில வாரங்களாக ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலாட்டா கலவரங்கள் நடந்தது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில், கடந்த வாரம் கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார். இதனால் மருத்துவர்கள், ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, உங்க அம்மா தான் என்னை தள்ளிவிட்டார். உங்க அம்மா தான் என் குழந்தை கொன்று விட்டார். குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டு ராதிகா பேசுகிறார்.
ராதிகா கர்ப்பம் கலைந்தது:
ராதிகா அம்மா பயங்கரமாக ஈஸ்வரியை திட்டுகிறார். இதையெல்லாம் கேட்டு கோபி, தன் அம்மா மீது கோபப்படுகிறார். பின் ஈஸ்வரி, நான் எதையும் செய்யவில்லை. இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அழுகிறார். இருந்தும் கோபி, நீங்கள் நினைத்தபடி குழந்தை கலைந்துவிட்டது சந்தோசமா என்று திட்டுகிறார். மேலும், ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் ராதிகா. கோபியும் தன் அம்மாவை வெளியே போக சொன்னார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, பாக்கியா வீட்டிற்கு சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இருந்தாலும் கோபி சொன்னதை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார். பின் அவரை பாக்கியா வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார். நேற்று எபிசோட்டில், ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுக்கிறார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்ய பாக்கியா வீட்டிற்கு வருகிறது. ஆனால், அங்கு ஈஸ்வரி இல்லை. பின் போலீஸ், பாக்கியா வீட்டில் விசாரணை நடத்துகிறது. அப்போது ஈஸ்வரி வெளியில் போயிருப்பதாக சொல்கிறார்கள். இருந்தாலுமே போலீஸ், நாளை காலையில் ஈஸ்வரி வந்தாக வேண்டும், இல்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு செல்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=Z1q0POoF5No
சீரியல் ப்ரோமோ:
போலீஸ் வந்து சென்ற உண்மை பாக்யாவுக்கு தெரிகிறது. என்ன செய்வதென்று புரியாமல் பதறிப் போய் இருக்கிறார். இன்னொரு பக்கம், ராதிகா கோபியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா அம்மா, இனி கவலைப்பட வேண்டாம். ஈஸ்வரி மீது புகார் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ராதிகா அதிர்ச்சியாகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் செழியன், பாக்கியா இருக்கிறார்கள். அப்போது போலீஸ் வந்து ஈஸ்வரியை கைது செய்கிறார்கள். இதை பார்த்து மொத்த குடும்பமே அதிர்ச்சி ஆகிறது. பின் கோபியை அவருடைய அப்பா பயங்கரமாக அடிக்கிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரி வெளியில் வருவாரா? கோபி என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.