ஒவ்வொரு மேடை, வெற்றி உங்கள் உழைப்பு - விஜே விஷாலுக்கு வாழ்த்து சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜே விஷால் சென்றது தொடர்பாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் நேஹா. இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். இவர் பிறந்தது கேரளவாக இருந்தலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் இவர் சீரியலில் நுழைந்தார்.
இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, சித்தி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நேஹா நடித்தார். குறிப்பாக, 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த வாணி ராணி தொடரில் வாணி மகளாக தேனு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர் நேஹா. பலருமே இவரின் பெயர் தேனு என்று தான் நினைத்து கொண்டார்கள்.
நேஹா குறித்த தகவல்:
இந்த சீரியல் மூலம் நேஹாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் இவர் குறும்படத்தில் நடித்தார். இப்படி சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் கூட நேகா நடித்து இருந்தார். அந்த வகையில் சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நேஹா நடித்திருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா நடித்து வருகிறார்.
நேஹா நடிக்கும் சீரியல்:
குடும்பத்திற்காக பெண்கள் எப்படி எல்லாம் போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய இந்த கதை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இவர் கல்லூரி மாணவி ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதை அடுத்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் லட்சுமி தொடரில் கதாநாயகி சுருதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நேஹா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் நேஹா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விஜே விஷால். இடையில் இவர் இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியளராக களமிறங்கி இருக்கிறார். இதனால் சீரியலில் அவருக்கு தங்கையாக நடித்த நேகா வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு போராடிக் கொண்டிருக்கும் நீங்கள் இப்போது எட்டியிருக்கும் உயரங்களுக்கு உங்களது கடின உழைப்பு மட்டும் தான் காரணம்.
விஷாலுக்கு வாழ்த்து:
உங்களுடைய ஒவ்வொரு மேடையும், ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு அங்கீகாரமும் நீங்களே உழைத்து பெற்றது. பிக் பாஸில் பங்கேற்பதற்காக உங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். உங்களை விரும்பும் அனைவரும், உங்களை சுற்றி எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் நினைத்ததை கட்டாயம் எட்டிப்பிடித்து விடுவீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் எப்போதும் சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.