விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்ற இனியா, மோசமாக பேசும் நிதீஷ் - பாக்கியலட்சுமி

By subhashini · 21/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, அட்வான்ஸ் பணம் தேவைப்படுகிறது என்றார். ஆனால், அந்த நபர் வெளி ஊரில் இருப்பதால் பணம் அப்புறமாக தருகிறேன் என்று சமாளித்தார். மறுநாள் காலையில் பாக்கியா, அந்த நபர் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் மட்டும் ஆர்டர் செய்யலாம். இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அந்த நபர் ஹோட்டலுக்கு வந்தார். அப்போது பாக்கியா அட்வான்ஸ் தொகை கேட்டார். உடனே அந்த நபர், நான் ஏற்கனவே 5 லட்சம் கொடுத்து விட்டேனே. எவ்வளவுதான் பணம் அட்வான்ஸ் தொகை கொடுப்பது என்று கேட்டவுடன் பாக்கியா, செல்வி இருவருமே ஷாக்கானார்கள்.

அப்போது பாக்கியா, நீங்கள் ஐம்பதாயிரம் தான் கொடுத்தீர்கள். எதற்காக இப்படி மாத்தி பேசுகிறீர்கள் என்று கேட்டார். உடனே அந்த நபர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து போலீசை வர வைத்து விட்டார். போலீசுமே எல்லோரையும் வெளியே அனுப்பி கடையை மூடி விட்டார்கள். பின் பாக்கியா, 50,000 தான் அந்த நபர் தந்தார். அவர் சொல்வதெல்லாம் பொய் என்றார். உடனே அந்த நபர், குடும்பமாக சேர்ந்து என்னை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னார். பின் செல்வி, கவுன்சிலருக்கு போன் செய்தார். ஆனால், கவுன்சிலர் மீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா இருந்தார். அந்த இடத்திற்கு வந்த இனியா கம்ப்ளைன்ட் கொடுத்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, அந்த நபர் பதில் கொடுக்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மாத்தி மாத்தி கேள்வி கேட்பதால் அந்த நபரால் எதுவும் பேச முடியவில்லை. அப்போது இனியா, நீங்கள் எந்த மண்டபத்தை புக் செய்தீர்கள் என்று கேட்டார். அந்த நபருமே ஏதேதோ ஒரு மண்டபத்தின் பெயரை சொன்னார். உடனே செழியன் அந்த மண்டபத்தை சோசியல் மீடியாவில் தேடி பார்த்தார். ஆனால், அந்த நபர் சொன்ன பெயரில் மண்டபமே இல்லை. உடனே போலீஸ், உண்மையாலுமே உன் மகளுக்கு கல்யாணமா? என்று கேட்டு மிரட்டினார்கள். அந்த நபரால் எதுவுமே சொல்ல முடியாமல் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். அதற்குப்பின் போலீசுமே அந்த நபரை துரத்தி சென்றர்கள். பின் அந்த நபரை துரத்திக் கொண்டே கோபி- எழில் போனார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

அந்த நபர் கடைசியில் சுதாகரை சந்தித்து தான் நடந்ததை எல்லாம் சொல்லி பேசிக்கொண்டிருந்தார்கள். இதை பார்த்த கோபி, எழிலுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த கோபி, இவ்வளவு வேலை செய்தது சுதாகர் தான். சுதாகர் தான் இப்படி எல்லாம் நம் குடும்பத்தை பழிவாங்க செய்கிறான் என்று சொன்னவுடன் இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் இனியா, சுதாகரின் வீட்டிற்கு செல்ல கிளம்பினார். உடனே பாக்கியா, தடுத்து நிறுத்தி விவாகரத்து கேஸ் நடக்கப்போகிறது. இப்போது எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். அதற்குப்பின் இனியா, பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியாவின் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கிளம்புகிறார்கள். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுகிறார். அப்போது கோபி- பாக்கியா இருவருமே ஆறுதல் சொல்கிறார்கள். அதற்கு பின் கோர்ட்டுக்கு கோபி, பாக்கியா, இனியா, எழில் நான்கு பேரும் போனார்கள். அங்கு நிதிஷ், சுதாகர் இருவருமே வந்திருக்கிறார்கள். சுதாகர், பாக்கியாவிடம் பேச வருகிறார். உடனே அங்கிருந்து இனியா சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது இனியாவிடம் நிதீஷ், என்னை விவாகரத்து செய்துவிட்டு உன்னுடைய கள்ளக்காதலன் ஆகாசுடன் சேர்ந்து ஊர் சுற்ற நினைக்கிறாயா. அவனை தான் நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து பாக்கியா- கோபி இருவரும் வந்ததால் நிதீஷ் சென்று விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு கிளம்பி பாக்கியா குடும்பத்தினர் வருகிறார்கள். அப்போது இனியா, நிதிஷ் தன்னிடம் மோசமாக பேசியதைப் பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full