ரெஸ்டாரன்ட் முன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள், பாக்யா என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி

By subhashini · 22/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து இருந்தார்கள். இதனால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் அதை நம்பவில்லை. பின் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார்.

பின் ஆபிசில் செழியனுக்கு வேலை போய் விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அழுது புலம்ப, கோபியும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்தித்தார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து எழில் தனது அம்மாவை போலீஸ் கைது செய்வது போல் கெட்ட கனவு காண, அமிர்தா அவரை சமாதானம் செய்து தூங்க வைத்தார்.

பாக்கியலட்சுமி:

இந்த வாரம் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஹோ ட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேச, பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருந்தார். நேற்று எபிசோட்டில், எல்லா நகைகளையும் அடமானம் வைக்க இருப்பதாக ஈஸ்வரியிடம் பாக்கியலட்சுமி சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே ஈஸ்வரி, தன்னிடம் இருக்கும் நகைகள், தாலியையும் கொடுத்தார். இதனால் பாக்கியா கோபப்பட்டு, என்னிடம் இருக்கும் தாலிக்கு அர்த்தமே கிடையாது. இதை வைத்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. உங்களுக்கு கொடுத்த எல்லா வாக்குறுதியும் நிறைவேறி விற்று தான் மாமா சென்றிருக்கிறார். அது அவருடைய நினைவாக என்றென்றும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று சொல்ல, ஈஸ்வரி மனம் உடைந்து அழுதார்.

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து வந்த பழனிச்சாமி, பண உதவி செய்வதாக கேட்க, பாக்யா வாங்க மறுத்து விட்டார். இன்னொரு பக்கம் ஜெனி, வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று செழியன் இடம் சொல்ல, அவரால் எதுவும் பேச முடியாமல் தயங்கி தயங்கி இருந்தார். பின் தன்னுடைய நகைகள் எல்லாம் எடுத்து பாக்யா பேங்க் சென்று அடகு வைத்தார். அப்போது வந்த எழில், தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, பேங்கில் நகை வைத்து பணம் வாங்கி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்கிறார் பாக்யா. ஆரம்பத்தில் தயங்கிய அவர் பின் தருவதாக ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் பாக்யாவிற்கு மாத்தி மாத்தி போன் செய்ய பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து இருக்கிறார்கள். பாக்கியாவும் எதுவும் சொல்ல முடியாமல் சமாளிக்கிறார். ஜெனி இடம் தன்னிடம் இருக்கும் பணத்தை அனுப்ப சொல்கிறார். பின் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதை அறிந்த பாக்யா,எல்லோரையும் சமாதானப்படுத்துகிறார். ஆனால், அவர்கள் யாருமே கேட்கவில்லை. கடைசியில் போலீஸ் வந்து பாக்கியாவுக்கு வார்னிங் கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full