ரெஸ்டாரன்ட் முன்பு ஆவேசத்தில் போராட்டம் நடத்தும் மக்கள், பாக்கியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்து, 50 ஆயிரம் பைன் போட்டு இருந்தார்கள். இதனால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து வரும் செய்தியை பார்த்து சந்தோஷப்பட்டு நடந்ததை ராதிகாவிடம் சொன்னார். ஆனால், ராதிகா அதை நம்பவில்லை.
பின் பாக்கியா, கடை கணக்கு பார்க்கும் போது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இதனால் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார். இந்த வாரம் ஆபிசில், இத்தனை பேருக்கு எங்களால் வேலை கொடுக்க முடியாது என்று சொல்லி செழியனை வேலை விட்டு தூக்கி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுதார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின் கோபி இடம் சொல்லி நடந்ததை சொல்லி ஒரு குழந்தையைப் போல செழியன் அழுது புலம்ப, கோபியும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். பின் செழியன் வீட்டுக்கு வராததை நினைத்து ஜெனி வருத்தப்பட்டு கொண்டிருக்க, செழியன் வந்தார். அவர் முகம் வாடி இருந்ததை பார்த்து பாக்கியா-ஜெனி இருவரும் காரணம் கேட்க, அவர் எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்தித்தார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுக்க, எழிலும் மன்னிப்பு கேட்டு கெஞ்சியும் அவர் எதையுமே காதில் வாங்கவில்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், எழில் சொல்ல வருவதை கேட்காமல் ப்ரொடியூசர் சென்றுவிட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி-ராதிகா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பாக்யா நாளைக்குள் கஸ்டமர்களுக்கு பணம் செட்டில் பண்ணவில்லை என்றால் அவள் கதி அரோகதி என்று கோபி சொல்ல, பாக்கியம் மீது எதற்கு உங்களுக்கு இவ்வளவு வன்மம் என்று ராதிகா திட்டி இருந்தார். உடனே ராதிகாவின் அம்மாவும் கோபிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசி இருந்தார்.
https://youtu.be/x9rorzHhyio?si=HioSgEtZHae8-INy
சீரியல் ட்ராக்:
அதனைத் தொடர்ந்து எழில் தனது அம்மாவை போலீஸ் கைது செய்வது போல் கெட்ட கனவு காண, அமிர்தா அவரை சமாதான செய்து தூங்க வைத்தார். மறுநாள் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து எப்படியாவது பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஏற்பாடு செய்தார். பின் ஹோட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேச, பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருந்தார்.
https://youtu.be/5lp7dyUxD9c?si=axA4IoWKHnW8Bo-d
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ரெஸ்டாரன்ட் முன்பு மக்கள் அனைவருமே போராட்டம் செய்கிறார்கள். பாக்யா டைம் கேட்டும் யாரும் கொடுக்கவில்லை. போலீசும் பாக்யாவை எச்சரித்து விட்டு செல்கிறார்கள். இதனால் பாக்கியா தன்னுடைய நகைகளை எல்லாம் விற்க போவதாக ஈஸ்வரிடம் கேட்க, அவர் தன்னிடம் இருந்து தாலி எடுத்து கொடுக்கிறார். உடனே பாக்யா, என்னிடம் இருக்கும் தாலிக்குதான் அர்த்தமே கிடையாது. மாமா உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டு சென்றிருக்கிறார். அவர் நினைவாக அது உங்களிடம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.