கோபியை அடித்து துன்புறுத்தும் போலீஸ், வேதனையில் கதறும் இனியா,பாக்கியா - பாக்கியலட்சுமி

By subhashini · 29/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், நீ மீண்டும் நிதிஷ் உடன் வாழ வேண்டும். எங்கள் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கு என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால், இனியா முடியாது என்று சொல்லி விட்டார். மறுநாள் காலையில் இனியா மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போனார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுதாகர், தேவையில்லாமல் போலீஸ் கோர்ட் என்று இரண்டு வீடுமே அலைய வேண்டாம். உங்கள் வீட்டில் வர சொல்லு, பேசி முடிவெடுக்கலாம். உன் அம்மாவுடைய ரெண்டு ரெஸ்டாரன்டையும் தந்து விடுகிறேன்.

கல்யாணத்திற்கு செலவு செய்த பணத்தையும் வட்டி முதலுமாக தருகிறேன். உனக்கு விவாகரத்தும் வாங்கி தருகிறேன். உன்னுடைய அம்மா ரெஸ்டாரண்டில் தான் நான் இருக்கிறேன். நீ அங்கே வந்தால் நான் எழுதி கொடுக்கிறேன் என்று சொன்னார். இதை நம்பி இனியாவுமே போனார். ஆனால், அங்கு சுதாகர் இல்லை. நிதீஷ் நிறைய போதை மருந்து சாப்பிட்டு இருந்தார். அப்போது இனியாவை பார்த்து நிதீஷ் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபத்தில் இனியா, நிதீஷை கீழே தள்ள தலையில் அடிபட்டது. இனியா எவ்வளவு எழுப்பியும் நிதீஷ் எழவில்லை. இதனால் இனியா ரொம்பவே பயந்து விட்டார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் நிதிஷ் மூச்சுப் பேச்சு இல்லாமல் இறந்த நிலையில் இருந்தார். இதை பார்த்து இனியா ரொம்பவே பதறிப் போனார். உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வந்த இனியா பாக்கியாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னார். பின் பாக்கியா, இனியா இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். இதை பார்த்தவுடன் பாக்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இனியாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் வீட்டில் நடந்ததை எல்லாவற்றையும் இனியா சொன்னார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.

நேற்று எபிசோட்:

கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அமைதியாக இருந்தார். இனியா, நான் உண்மையை சொல்லி போலீசில் சரணடைகிறேன் என்றெல்லாம் சொன்னார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அதை ஒத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் நிதிஷ் இறந்த விஷயம் அறிந்து போலீஸ், சுதாகர் எல்லோருமே அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்துகிறது. அப்போது சுதாகர், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் இனியாவும் அவருடைய குடும்பம் தான். அவர்கள் தான் இதை செய்திருக்கணும் என்று கம்ப்ளைன்ட் கொடுத்தார். இதை பார்த்தவுடன் இனியா, போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போகிறேன் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் ட்ரிப்புக்கு கிளம்புங்கள். போலீசை நான் சமாளிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால், இனியா வீட்டில் உள்ள யாருமே கேட்கவில்லை. இருந்தாலுமே கோபி வலுக்கட்டாயமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி விடுகிறார். ஆனால், ஈஸ்வரி மட்டும் தன் மகனை விட்டு பிரியாமல் அங்கே இருக்கிறார். அதற்குப்பின் போலீஸ் வீட்டிற்கு வருகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த போலீஸ், இனியாவை விசாரிக்கிறார்கள். அதற்கு கோபி, இனியா டூர் போய் இருக்கிறார். இங்கு இல்லை என்று சொல்கிறார். விடாமல் போலீஸ் கோபியை கைது செய்து செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் போலீஸ் ஸ்டேஷனில் கோபியை துருவி துருவி கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள். கோபி, இதற்கும் என் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசுங்கள் என்று சமாளிக்கிறார். இருந்தாலுமே போலீஸ் விடவில்லை கோபியை அடித்து துன்புறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செல்வி, ஈஸ்வரியை பார்க்க வீட்டுக்கு வருகிறார். அப்போது ஈஸ்வரியை செல்வியை பார்த்து ரொம்ப எமோஷனலாக பேசி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full