புது ஆர்டரால் சிக்கலில் சிக்கிய பாக்கியா, ஹோட்டலை இழுத்து மூடிய போலீஸ் - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நிதிஷ், நிதிஷனுடைய அம்மாவும் தேவையில்லாமல் இனியாவை பேசி இருந்தார்கள். கோபத்தில் கொந்தளித்து இனியா, இனிமேல் என்னையும், என்னுடைய குடும்பத்தை பற்றியும் ஏதாவது பேசினீர்கள் என்றால் நான் சும்மா விடமாட்டேன். கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்றார். அதற்கு நிதிஷ், எங்களுக்கு எப்படியும் வெளிவர தெரியும் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு இனியா, நான் ரிப்போர்ட்டர். அதை வைத்து உங்களுடைய குடும்பமானத்தை வாங்குகிறேன் என்றெல்லாம் சவால் விட்டார்.
இதனால் சுதாகருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இனியா, கோபி இடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர், தனக்கு தெரிந்த நபரை வரவைத்து பாக்கியாவின் ஓட்டலில் ஆர்டர் எடுத்து பிரச்சனையில் சிக்க வைக்க ஐடியா கொடுத்தார். இதனால் அந்த நபருமே பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று சமையல் ஆர்டரை கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் அட்வான்ஸ் தொகை 50,000 கொடுத்தார். இதையெல்லாம் அங்கிருந்த கவுன்சிலருமே பார்த்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா அனுப்பிய விவாகரத்து நோட்டீசை பார்த்தவுடன் சுதாகர் குடும்பத்தில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள். நிதிஷும் அவருடைய அம்மாவும் இனியாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே சுதாகர், இதை நாம் பொறுமையாக தான் கையாள வேண்டும். சொத்தில் பங்கு கேட்பாள் என்றெல்லாம் குருட்டுத்தனமாக யோசித்தார். இன்னொரு பக்கம் இனியா தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா, கோபி, ஈஸ்வரி மூவருமே சந்தோஷப்பட்டார்கள்.
நேற்று எபிசோட்:
பாக்கியா, தனக்கு ஆர்டர் கொடுத்த நபருக்கு போன் செய்து பணம் கேட்க, அந்த நபருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். பின் இனியாவை பார்க்க சுதாகர் அவருடைய மனைவியுமே வந்திருந்தார்கள். அப்போது சுதாகர், எதற்காக இந்த அவசர முடிவு. நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு இனியா, இனிமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எங்களுடைய குடும்பத்தையும் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். என் அம்மாவின் ரெண்டு ரெஸ்டாரன்ட், என் கல்யாணத்திற்கு ஆன செலவு என எல்லாத்தையும் வட்டி முதலுமாக வாங்காமல் விடமாட்டேன். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கிளம்பி விட்டார். இதனால் சுதாகருக்கு இன்னும் கோபம் அதிகமானது.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியலட்சுமி, புது ஆடர் கொடுத்த நபர் அட்வான்ஸ் தொகை கொடுக்கவில்லை என்று இனியாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் அந்த நபருக்கு போன் செய்த பாக்கியா, அட்வான்ஸ் பணம் தேவைப்படுகிறது என்கிறார். ஆனால், அந்த நபர் வெளிஊரில் இருப்பதால் பணம் அப்புறமாக தருகிறேன் என்று சமாளிக்கிறார். மறுநாள் காலையில் பாக்கியா, அந்த நபர் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் மட்டும் ஆர்டர் செய்யலாம். இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து அந்த நபர் ஹோட்டலுக்கு வருகிறார். அப்போது பாக்கியா அட்வான்ஸ் தொகை கேட்கிறார். உடனே அந்த நபர், நான் ஏற்கனவே 5 லட்சம் கொடுத்து விட்டேனே. எவ்வளவுதான் பணம் அட்வான்ஸ் தொகை கொடுப்பது என்று கேட்டவுடன் பாக்கியா, செல்வி இருவருமே ஷாக்காகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது பாக்கியா, நீங்கள் ஐம்பதாயிரம் தான் கொடுத்தீர்கள். எதற்காக இப்படி மாத்தி பேசுகிறீர்கள் என்று கேட்டார். உடனே அந்த நபர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து போலீசை வர வைத்து விடுகிறார். போலீசுமே எல்லோரையும் வெளியே அனுப்பி கடையை மூடி விடுகிறார்கள். பின் பாக்கியா, 50,000 தான் அந்த நபர் தந்தார். அவர் சொல்வதெல்லாம் பொய் என்கிறார். உடனே அந்த நபர், குடும்பமாக சேர்ந்து என்னை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறார். பின் செல்வி, கவுன்சிலருக்கு போன் செய்கிறார். ஆனால், கவுன்சிலர் மீட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா இருக்கிறார். அந்த இடத்திற்கு வந்த இனியா கம்ப்ளைன்ட் கொடுத்தவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, அந்த நபர் பதில் கொடுக்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.