விவாகரத்து கேட்கும் ராதிகா, கோபத்தில் கோபி எடுக்கும் முடிவு? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கர்ப்பம் கலந்த விவகாரத்தில் கோபி தன் மகனே இல்லை என்று ஈஸ்வரி தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு வெளியே அனுப்பி விடுகிறார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடந்தது. அதில் பாக்கியா- கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். பின் பார்ட்டியில் நடந்த சண்டையில் போலீஸ் அனைவரையும் கைது செய்து இருந்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார்.
இதனால் பாக்கியா உடைந்து போய் இருந்தார். மேலும், வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். இந்த உண்மை கோபிக்கு தெரியவந்து வழக்கம் போல் பாக்கியாவை திட்டி சண்டை போட்டு இருந்தார். அதோடு கோபி, இனியாவை அழைத்து செல்ல பார்த்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்து நிறுத்தி கோபியை வெளியே அனுப்பி விட்டார். கடந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்ததால் இனியா போய் பயந்து கோபியிடம் சொல்லி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இருந்தாலும், பாக்கியாவிற்கு உண்மை தெரிந்து கல்லூரிக்கு போனார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்டார். அப்போது பிரின்சிபால், இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்டு சண்டை போட்டு இருந்தார். கோபி நடந்ததை நினைத்து ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். ஆனால், ராதிகா, கோபியை திட்டி சண்டை போட்டார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுகிறார். கடைசியில் அவர், ஏதோ ஒரு முடிவு எடுத்து கடிதம் எழுதி இருந்தார். நேற்று எபிசோடில், இனியா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போவதாக கடிதம் எழுதி வைக்கிறார். அப்போது இனியாவை பார்த்த பாக்கியா, கையில் என்ன என்று சொல்லி கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி ஆகி இருந்தார். பின் பாக்கியா, இனியா பேசுவதை கேட்டு வந்த ஜெனி, இனியாவுக்கு அறிவுரை சொல்கிறார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியா சொல்கிறார்.
நேற்று எபிசோட்:
இருந்தாலும், இனியா செய்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பாக்கியாவிற்கு ஈஸ்வரி ஆறுதல் சொல்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபி, மயூவை பள்ளிக்கு அழைத்து செல்ல பார்க்கிறார். ஆனால், ராதிகா தடுத்து அவரே கூட்டிக் கொண்டு போகிறார். பின் ராதிகாவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என்ன ஆச்சு? என்று கோபி கேட்க, கோபத்தில் ராதிகா, உங்களுக்கு எங்கள் மேல் அக்கறையே கிடையாது. உங்களுடைய குடும்பத்தின் மேல் தான் பாசம். எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்புகிறார். உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.
இன்றைய எபிசோட்:
நான் என் குடும்பத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் என்று சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு வெளியே வந்த கோபி, பாக்யா வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஏங்கி வருத்தப்படுகிறார். பின் ராதிகா மீது இருந்த கோபத்தை கோபி, ஹோட்டலில் வேலை செய்பவர்களிடம் காண்பிக்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, வீட்டில் நடந்தை பழனிச்சாமி இடம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.