எழில் படத்தின் கொண்டாட்டத்தில் பாக்கியா குடும்பம், கோபியிடம் பேச மறுத்த ராதிகா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா, இனி உனக்கு எந்த கஷ்டத்தையும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு தந்தை என்று யாருமில்லை என்று ரொம்ப எமோஷனலாக மையூவிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி பெயரில் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதை பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். அதில் ராதிகா, கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைக் கேட்டவுடன் மொத்த பேரும் ஷாக் ஆகி இருந்தது. கோபிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த ஈஸ்வரி, ராதிகாவை மறந்துவிடு. உன்னுடைய குடும்பத்தை பார். அவள் உன் வாழ்க்கையில் இல்லை என்றெல்லாம் அவருடைய மனதை மாற்ற பார்த்தார். ஆனால், கோபி அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் கோபி, ராதிகாவை பார்க்க வீட்டிற்கு போனார். அந்த வீட்டையும் ராதிகா காலி செய்து விட்டார். அப்போது பாக்கியாவும் ராதிகாவை பார்க்க வந்தார்.
பாக்கியலட்சுமி:
உடனே பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், ராதிகா போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவிற்கு போன் செய்து பேசினார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்க, நான் சரியாக யோசித்து தான் எடுத்தேன். யாருக்காகவும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
உடனே கோபி போனை வாங்கி பேச, ராதிகா ஃபோனை வைத்து விட்டார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். உடனே பாக்கியா, முன்னாள் கணவரை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு நான் நல்லவள் கிடையாது. உங்கள் மகனின் பிரச்சனையை பற்றி யோசிக்கும் அளவிற்கு நேரமில்லை என்று சொன்னார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்பி இருந்தார். ஈஸ்வரி, நானும் வருகிறேன் என்றவுடன் கோபி வேண்டாம் என்று சென்று விட்டார்.
சீரியல் ட்ராக்:
அதன் பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ? ராதிகாவுடன் கோபி சென்று விடுவானோ? என்றெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு பாக்கியா, எதுவாக இருந்தாலும் அவர்களுடைய முடிவு. நாம் தலையிட முடியாது. எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார் . இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், நாம் சேர்ந்து வாழலாம். இந்த விவாகரத்து வேண்டாம். எனக்காக கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் பேச, ராதிகா எதுவுமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
https://www.youtube.com/watch?v=p2MmeVcSsTw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் எழில், தான் தயாரிக்கும் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார். இதற்கு எழிலின் குடும்பத்தில் இருந்து எல்லோருமே வந்திருக்கிறார்கள். கோபியை பார்த்தவுடன் எழில் கட்டிப்பிடித்து பேசுகிறார். இதனால் கோபிக்கு ஒரே சந்தோஷம். அதற்குப்பின் மாஸாக பாக்யா என்ட்ரி கொடுக்கிறார். அவரை தொடர்ந்து ராதிகாவும் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார். கோபி, ராதிகாவிடம் பேச போகிறார். ஆனால், ராதிகா அவரை கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார். இதை நினைத்து கோபி வருத்தப்படுகிறார்.