ராதிகா-பாக்கியா கூட்டணி, சந்தோஷத்தில் கோபி- என்னடா நடக்குது அங்க? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 1/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா, இனியா வைத்த ஸ்டேட்டஸை பார்த்து வேதனைப்பட்டார். ராதிகா அங்கிருந்து போகட்டும் என்றார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மா, மயூவை புது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவர் அந்த வீட்டில் ரொம்ப வருத்தத்தோடு படுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள். பின் பாக்கியா, கோபி இடம் தனியாக பேசினார். அப்போது அவர், ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார்.

இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தான் நீங்கள் துரோகம் செய்தீர்கள். உங்களை நம்பி வந்தவர்களையும் இப்படி ஏமாற்றுவதா? என்று ரொம்ப ஆவேசமாக பேசி இருந்தார். இதனால் கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. அதோடு பாக்கியா சொன்னதை கேட்டு கோபி ரொம்ப எமோஷனல் ஆகி ராதிகாவை பார்க்க போகிறேன் என்றார். உடனே ஈஸ்வரி வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், கோபி கேட்கவில்லை, ராதிகாவை பார்க்க போனார். நேற்று எபிசோட்டில் ராதிகா வேதனையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பாக்கியலட்சுமி:

அந்த சமயம் வந்த கோபி அவரிடம் மன்னிப்பு கேட்டு, எதற்கு வீட்டை காலி செய்கிறாய்? இங்கே இருக்கலாம் என்று சொன்னார்.அதற்கு ராதிகா, நான் தெளிவாக யோசித்தான் முடிவு எடுத்தேன். நீங்கள் எனக்கு இல்லை என்று தெரிந்ததால் தான் இந்த முடிவெடுத்தேன் என்றார். அதற்கு கோபியும் என்னென்னவோ சொல்லி சமாளிக்க, ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் ஹவுஸ் ஓனர் வந்தவுடன் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு ராதிகா கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வராததால் கோபத்தில் பாக்கியாவிடம் சண்டை போட்டார்.

நேற்று எபிசோட்:

மேலும், கோபி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ராதிகா கிளம்பி விட்டார். பின் வேதனையிலேயே கோபி வீட்டிற்கு வந்தார். கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி- இனியா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பாக்கியா அதிர்ச்சியானார். பின் கோபியிடம் ஈஸ்வரி விசாரித்தார். அப்போது கோபி, நான் சொல்லியும் கேட்கவில்லை, ராதிகா கிளம்பிவிட்டால் என்று வேதனையோடு பேசி இருந்தார். உடனே ஈஸ்வரி, அவள் போகட்டும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. நாங்கள் உன்னை பார்த்துக்கொள்கிறோம் என்று ஆறுதலாக பேசியவுடன் கோபி மனம் மாறுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே கோபத்தில் பாக்யா, உங்கள் பிள்ளைகளும் அமிர்தா, ஜெனியை விட்டு போனால் என்ன செய்வீர்கள்? இனியா உடைய கணவரும் அவளை விட்டு போனால் நீங்கள் இப்படித்தான் அமைதியாக இருப்பீர்களா? என்று பேசி இருந்தார். பின் புத்தி வந்த கோபி, ராதிகாவை பார்க்க போனார். இதனால் ஈஸ்வரி, பாக்யாவிடம் சண்டை போட்டார். பின் ராதிகா தங்கி இருக்கும் புது வீட்டிற்கு சென்ற கோபியை பார்த்த மையூ ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் ஈஸ்வரி போன் செய்து, நீ கிளம்பி விட்டாயா? வீட்டிற்கு வா? என்று அவரை கட்டாயப்படுத்துகிறார்.

https://www.youtube.com/watch?v=h-tH2sCdOnQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியா, நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வாடகை கொடுத்தால் தான் இங்கு தங்க விடுவேன் என்று சொன்னவுடன் கோபியும் சம்பாதிக்கிறார். ராதிகா- பாக்கியா இருவருமே ஒன்றாக பேசி சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். ஆனால், ஈஸ்வரிக்கு பிடிக்கவே இல்லை. பின் காபியை ராதிகா, கோபிக்கு கொடுக்கிறார். பாக்கியா, ஈஸ்வரி கொடுக்கிறார். அப்போது ஈஸ்வரி, எதற்கு ராதிகா கிச்சனில் இருக்கிறார் என்று கேட்டவுடன் வாடகைக்கு காசு கொடுத்து விட்டார்கள் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, பாக்கியா நான் சொல்வதை கேட்கவே இல்லை. திமிராக பேசுகிறார் என்று கோபியிடம் சொல்கிறார். உடனே அவர் சிரிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full