விவாகரத்து வழக்கு: ராதிகாவிடம் புலம்பி கதறும் கோபி, பாக்கியா என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, உங்க அம்மா ரொம்பவே இந்த குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் தான் பெண்கள் நிலைமையை புரிந்து கொள்வதில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதைக் கேட்டவுடன் செழியன் அழுதார்.
பின் அவர் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டு பேச, பாக்கியாவும் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தார். மீண்டும் கோபி, ராதிகா வீட்டுக்கு சென்றார். ஆனால், அவருடைய அம்மா, ராதிகா- மயூ இருவரும் இங்கில்லை. அவர்கள் எங்கேயோ சென்று விட்டார்கள். எனக்கு கூட தெரியாது என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் ராதிகா-மயூ இருவரும் பீச்சில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, இனி உனக்கு எந்த கஷ்டத்தையும் நான் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு தந்தை என்று யாருமில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி பெயரில் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதை பாக்கியா வாங்கி வைத்தார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் பாக்கியா அந்த கவரை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். அதில் ராதிகா, கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைக் கேட்டவுடன் மொத்த பேரும் ஷாக் ஆகி இருந்தது. கோபிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த ஈஸ்வரி, ராதிகாவை மறந்துவிடு. உன்னுடைய குடும்பத்தை பார். அவள் உன் வாழ்க்கையில் இல்லை என்றெல்லாம் அவருடைய மனதை மாற்ற பார்த்தார். ஆனால், கோபி அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் கோபி, ராதிகாவை பார்க்க வீட்டிற்கு போனார். அந்த வீட்டையும் ராதிகா காலி செய்து விட்டார். அப்போது பாக்கியாவும் ராதிகாவை பார்க்க வந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், ராதிகா போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவிற்கு போன் செய்து பேசினார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்க, நான் சரியாக யோசித்து தான் எடுத்தேன். யாருக்காகவும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று சொன்னார். உடனே கோபி போனை வாங்கி பேச, ராதிகா ஃபோனை வைத்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். உடனே பாக்கியா, முன்னாள் கணவரை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு நான் நல்லவள் கிடையாது. உங்கள் மகனின் பிரச்சனையை பற்றி யோசிக்கும் அளவிற்கு நேரமில்லை என்று செல்கிறார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்புகிறார். ஈஸ்வரி, நானும் வருகிறேன் என்றவுடன் கோபி வேண்டாம் என்று சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதன் பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ? ராதிகாவுடன் கோபி சென்று விடுவானோ? என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா, எதுவாக இருந்தாலும் அவர்களுடைய முடிவு. நாம் தலையிட முடியாது. எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர், நாம் சேர்ந்து வாழலாம். இந்த விவாகரத்து வேண்டாம். நான் உங்களை புரிந்து கொள்கிறேன். எனக்காக கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் பேசுகிறார். ஆனால், ராதிகா எதுவுமே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.