ஈஸ்வரியை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய ராதிகா அம்மா, பாக்கியா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி

By subhashini · 1/10/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் இனியா, கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டு தேர்வானார். பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்ததை பார்த்த கோபி, தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யா ரெஸ்டாரண்டுக்கு அனுப்பி இருந்தார். பாக்கியாவை பழிவாங்க தான் இதை செய்வதாக தன் நண்பனிடம் ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார். பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இன்னொரு பக்கம் பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை என்று சொல்ல, ஆறுதல் சொல்லி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். செழியன் நிலைமையை அறிந்த பாக்கியா கோபப்பட்டு அறிவுரை சொன்னார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன் குடித்த விஷயம் தெரிந்து ஜெனி சண்டை போட்டார். மறுநாள் செழியன், தான் செய்தது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். பாக்கியா, எனக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. வீட்டு பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்கியா அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

மேலும், நடனப் போட்டியில் தேர்வான விஷயத்தை வீட்டில் இனியா சொல்ல எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், டிவியில் வரும் நிகழ்ச்சியில் நடனமாட போகிறேன் என்று இனியா சொன்னவுடன் படிப்பு வீணாக போய்விடும், நடனமெல்லாம் வேண்டாம். படிப்பை கவனி என்று ஈஸ்வரி- பாக்கியா இருவருமே சொன்னார்கள். ஆனால், இனியா அவர்கள் சொன்னதை கேட்காமல் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று இனியாவை தூண்டி விட்டார். பின் கோபி உடன் இனியா பேசுவதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவனுடன் பேசுகிறாய்? என்று கேட்டதற்கு, ஈஸ்வரியை எதிர்த்து இனியா பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

உடனே செழியனும் ஈஸ்வரியை எதிர்த்து பேசி இருந்ததால் ஈஸ்வரி மனமடைந்து உள்ளே சென்று விட்டார். நேற்று எபிசோட்டில் ராதிகா, இனியா கேட்பது நியாயமா? தனக்கு வேணுமென்றதை எப்படியாவது அடையனும் என்று நினைக்கிறாள். அதற்கு நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்கள். இது நல்லது கிடையாது. நீங்கள் பாக்யாவை பழிவாங்குக, உங்கள் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறீர்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாட்டியிடம் இனியா மன்னிப்பு கேட்டார். அப்போ வீட்டிற்கு வந்த எழில் எல்லோரையும் விசாரித்தார். இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு அவருடைய அம்மா வந்தார். இதை பார்த்த கோபி கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா நடனம் ஆடுவதை பற்றி எழில் வீட்டில் பேசுகிறார். ஆனால், பாக்கியா-ஈஸ்வரி இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை. இனியாவிற்கு ஆதரவாக ஜெனி- செழியன்- எழில் மூவருமே பேசுகிறார்கள். இனியாவிற்காக எல்லோரும் வாக்குவாதம் செய்கிறார்கள். கடைசியில் இனியா நடனம் ஆட பாக்கியா-ஈஸ்வரி ஒத்துக்கொள்கிறார்கள். பின் இனியாவை கல்லூரியில் விட ஈஸ்வரி செல்கிறார். இதை பார்த்து ராதிகாவின் அம்மா ரொம்ப மோசமாக பேசுகிறார். புருஷன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? அவருடைய மாலை கூட காய்ந்திருக்காது, அதுக்குள் மேக்கப் பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாயா என்று ரொம்ப வன்மமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதையெல்லாம் கேட்டு மனமடைந்த ஈஸ்வரி வீட்டிற்குள் சென்று விடுகிறார். ஆனால், இதை யாரிடமும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டருக்காக பாக்கியா, சமையல் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று புது நபர் சொன்னவுடன் பாக்யா வேண்டாம். தரமான பொருட்கள் வாங்க வேண்டும். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவரிடம் வாங்கிக் கொள்கிறார். அவருடைய திட்டம் பலிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். கடைசியில் ஈஸ்வரி, இனியாவை கல்லூரியில் கொண்டு போய் விட சொல்லி செழியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full