கோபியை தேடி அலையும் ராதிகா, பாக்கியா என்ன செய்யப் போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 29/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, உங்கள் வீடியோ பார்த்து எல்லோருமே கிண்டல் செய்தார்கள். உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? தாத்தாவின் கடைசி ஆசையை தான் அம்மா செய்தாங்க. அம்மாவை அழிக்கிறேன் என்று எங்களுடைய வாழ்க்கையும் அழிக்கிறீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே போனார்.

உடனே ராதிகா, உங்க பிள்ளைகள் மட்டும் தான் ரொம்ப முக்கியம். எதற்கு உங்களை திருமணம் செய்தேன் என்று தெரியவில்லை? உங்களால் என் வாழ்க்கை போனது என்று கத்தி சண்டை போட்டார். கோபியும் பதிலுக்கு பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று பேச, நிம்மதியில்லை என்றால் வெளியே போங்க என்று ராதிகா சொன்னார். ஆத்திரத்தில் கோபியும் வெளியே வந்து விட்டார். பின் காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபிக்கு நெஞ்சுவலி வந்தது. அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவிற்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோடில் கோபி, நெஞ்சு வலி வந்து துடித்தார். ராதிகாவிற்கு மீண்டும் மீண்டும் போன் செய்தும் அவர் எடுக்கவே இல்லை. பின் இனியா, செழியன் எல்லோருக்குமே கோபி போன் செய்தார். ஆனால், யாருமே எடுக்கவில்லை. பின் வேறு வழியில்லாமல் பாக்கியாவுக்கு போன் செய்து கோபி நடந்ததை சொல்ல, பாக்யாவும் நேரில் சென்று கோபி நிலைமை அறிந்து ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்தார். பின் இந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல, அவருமே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்.

நேற்று எபிசோட்:

மேலும், ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்தார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை. கோபியின் உடல்நிலை சீரிசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் மருத்துவர். பின் உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என்றார் பாக்கியா. ஆனால், ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் கோபிக்கு மும்முரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் ஈஸ்வரி புலம்பி அழுது கொண்டிருக்கிறார். பின் எல்லோருமே கோபியை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் ராதிகா, கோபி வராததை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். பின் கோபிக்கு போன் செய்தார் ராதிகா. அதை பார்த்தவுடன் ஈஸ்வரி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் ராதிகா, எல்லோரிடமும் கோபியை பற்றி விசாரிக்கிறார். ஆனால், உண்மை தகவல் தெரியவில்லை. இன்னொரு பக்கம் கோபிக்கு சிகிச்சை நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது. இந்த தகவலை அறிந்து அமிர்தா, ஜெனி எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். ஒரு கட்டத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றார் ராதிகா. ஆனால், அங்கு யாருமே இல்லை. ஹாஸ்பிடலில் எல்லோருமே கோபியை நினைத்து ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full