ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய ராதிகா, திணறி போன பாக்கியா- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 4/10/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் நடனப் போட்டியில் தேர்வான விஷயத்தை வீட்டில் இனியா சொல்ல, படிப்பு வீணாக போய்விடும், நடனமெல்லாம் வேண்டாம் என்று ஈஸ்வரி- பாக்கியா இருவருமே சொன்னார்கள். பின் இதை இனியா, தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, இனியாவை தூண்டி விட்டார். பின் கோபி உடன் இனியா பேசுவதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவனுடன் பேசுகிறாய்? என்று கேட்டதற்கு ஈஸ்வரி மனமடைந்து உள்ளே சென்று விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, நீங்கள் பாக்யாவை பழிவாங்க, உங்கள் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறீர்கள் என்று திட்டி விட்டு சென்றார்.

இந்த வாரம் இனியா நடனம் ஆடுவதை பற்றி எழில் வீட்டில் பேச, பாக்கியா-ஈஸ்வரி இருவருமே ஒத்துக் கொள்ளவில்லை. இனியாவிற்கு ஆதரவாக ஜெனி- செழியன்- எழில் மூவருமே வாக்குவாதம் செய்தார்கள். கடைசியில் இனியா நடனம் ஆட பாக்கியா-ஈஸ்வரி ஒத்துக்கொண்டார்கள். பின் இனியாவை கல்லூரியில் விட ஈஸ்வரி போக, அப்போது ராதிகாவின் அம்மா, உனக்கு புருஷன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? அதுக்குள் மேக்கப் பண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாயா என்று ரொம்ப வன்மமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு மனமடைந்த ஈஸ்வரி வீட்டிற்குள் சென்று இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்கியா ஆர்டரை கெடுக்க கோபி வைத்த நபர் திட்டம் போட்டார். ஆனால், அவர் எண்ணம் பழிக்கவில்லை. பின் ஈஸ்வரி, இனியாவை கல்லூரியில் கொண்டு போய் விட சொல்லி செழியன் இடம் கேட்க, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். இதை ஜெனி, பாக்கியாவிடம் சொல்ல அவர், செழியனை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா ரெஸ்டாரண்டை ஒழிக்க திட்டம் போட்டார். நேற்று எபிசொட்டில் ஈஸ்வரியை தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு பாக்கியா அழைத்து சென்றார்.

நேற்று எபிசோட்:

அப்போது அங்கிருந்தவர்கள் ஈஸ்வரியை பார்த்து நக்கலாகவும், ஏளனமாகவும் பேசி இருந்தார்கள். இதையெல்லாம் கேட்டு ஈஸ்வரி மனமடைந்து வீட்டுக்கு வந்து விட்டார். பின் ஈஸ்வரி, நான் எங்கும் வரவில்லை. வீட்டுக்குள்ளே இருக்கிறேன், எனக்கு பொட்டு வேண்டாம் என்று கதறி கதறி அழுதார். இதனால் கோபப்பட்ட பாக்கியா, ஈஸ்வரியை மோசமாக பேசியவர்களை கடுமையாக திட்டி இருந்தார். அதற்குப்பின் பாக்கியா, ராதிகாவிடம் உங்கள் அம்மாவிற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை. இனியும் அவர்கள் தலையிட்டால் தொலைத்து விடுவேன் என்று கோபமாக திட்டி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

பின் ராதிகா, இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கேட்டதற்கு, எல்லாரும் போல தான் நான் கேட்டேன் என்று சமாளித்தார். இதனால் ராதிகா தன் அம்மாவை திட்டி விட்டு ஈஸ்வரியை பார்க்க போனார். இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராதிகா, ஈஸ்வரியை பார்த்து தன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். நான் உங்கள் மகனை கல்யாணம் பண்ணும் போதும், கர்ப்பமாக இருக்கும் போதும் ஊர் என்ன சொல்லும்? என்று எங்களை கஷ்டப்படுத்தினீர்கள். இப்போ உங்களை ஊர் சொல்லும் போது வருத்தமா இருக்கிறதா? என்று அவர் தவறை சுட்டி காட்டினார்.

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி-பாக்கியா கோபப்படுகிறார்கள். பின் பாகியா, எதற்கு நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஊருக்காக தானே அவர்கள் வாழ்ந்தார்கள். மற்றவர்களை பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. வயதானால் பக்குவம் வேணும் அதைத்தான் அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன் என்று ராதிகா செல்கிறார். பின் ஈஸ்வரி, இப்போ ஊரே என்னை தவறாக பேசுகிறது என்று புலம்புகிறார். இது எல்லாம் பார்த்து பாக்கியா ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் கோபி ரெஸ்டாரண்டில் செழியன் பேசி கொண்டு இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full