கோபியை அவமானப்படுத்திய ராதிகா, ஈஸ்வரியை வெளுத்து வாங்கிய பாக்கியா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா-ராதிகா குடும்பம் எல்லோருமே பிக்னிக்கை கொண்டாடி இருந்தார்கள். நல்லபடியாக பிக்னிக்கை முடித்து எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். பின் ராதிகா, பாக்யா கொடுத்த கெடு இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நாம் கிளம்பலாம் என்று சொல்ல, மொத்த குடும்பமே ஷாக் ஆனது. ஈஸ்வரி- இனியா இருவருமே கோபிக்காக வாக்குவாதம் செய்தார்கள். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பாக்கியா, எல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்று சொன்னார். இதனால் ஈஸ்வரி கோபப்பட்டு பாக்யா- ராதிகாவை திட்டி இருந்தார்.
பின் கோபி, ராதிகாவிடம் தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது ராதிகா, நீங்கள் வரவில்லை என்றால் நானும் மையூவும் கிளம்புவது உறுதி என்று சொன்னார். பின் ராதிகா, வீட்டை விட்டு கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் கோபி, துணியை பேக் செய்ய போனார். உடனே ராதிகா, நீங்கள் வரவில்லை. நானும் மையூ தான் போறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருங்கள் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். கோபி, எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னவுடன் ராதிகா, இருக்க முடியாது. என் முடிவில் நான் மாற மாட்டேன் என்று கிளம்பி விட்டார்.
பாக்கியலட்சுமி:
இதை பார்த்து பாக்கியாவிற்கு கஷ்டமாக இருந்தது. இனியாவும் தான் செய்த தவறை உணர்ந்து ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டார். நேற்று எபிசோட்டில் ராதிகா, மயூ இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார்கள். அதை பார்த்து கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பாக்கியாவுமே ரொம்ப வேதனைப்பட்டார். ஆனால், ஈஸ்வரி- இனியா மட்டும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.
வேதனையில் கோபி யாரிடமும் சரியாக பேசாமல் ராதிகாவை பற்றிய நினைத்துக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
ஈஸ்வரி, கோபியின் மனதை மாற்ற என்னென்னவோ பேசி இருந்தார். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நினைவுகளை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். செல்வி ஆறுதல் சொல்லியும் பாக்கியா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னவுடன் அவர் கோபப்பட்டு திட்டினார். கடைசியில் கோபி, ராதிகாவை பார்க்க கிளம்பினார். ஆனால், ஈஸ்வரி தடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி பேச்சை மீறி ராதிகாவை பார்க்க கோபி சென்று விடுகிறார். இதனால் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா கோபத்தில் பொங்கி எழுந்து ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். பின் ஈஸ்வரி - பாக்கியா இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் பாக்யா, குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுங்கள். உங்கள் பிள்ளையை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், திருமணமே செய்திருக்க கூடாது.
சீரியல் ட்ராக்:
என் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள் என்று தன்னுடைய மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார். ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி, இந்த முடிவை எதற்காக எடுத்தாய்? என்று கேட்க, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை. என்னையும் மயூவையும் பார்க்க வராதீர்கள். இது என்றுமே நிரந்தரம் தான். உங்களால் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்றெல்லாம் ராதிகா சொல்ல, கோபி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் அவர் வேதனையில் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.