இனியா சொன்ன வார்த்தையால் ராதிகா எடுத்த அதிரடி முடிவு, பாக்கியா சம்மதித்தாரா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபி உதவி செய்ததற்கு பணம் கொடுத்து விட்டு, நீங்கள் எப்போது காலி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ராதிகா, ரெண்டு நாளில் காலி செய்து விடுவோம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி- இனியா பதறி போனார்கள். கோபிக்கும் இந்த வீட்டை விட்டு கிளம்ப விருப்பமில்லை. இதைப் பற்றி ராதிகாவிடம் பேசி இருந்தார்கள். அதற்கு அவர், என்னால் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொன்னார். ஆனால், கோபி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் வந்தது.
மறுநாள் காலையில் இனியா காம்பிடிஷனுக்காக கோபி, மயூ- ராதிகா இருவரையும் அழைத்தார். ஆனால், இருவருமே வர முடியாது என்று சொன்னார்கள். ராதிகாவை விடாமல் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போனார் கோபி. பின் கல்லூரியில் இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்க, பாக்கியா போனார். அதே போல் கோபி, ராதிகாவையும் மேடைக்கு அழைத்தார். ஆனால், ராதிகா வர முடியாது என்று மறுத்துமே கோபி விடாமல் அவரை அழைத்துக்கொண்டு போனார். மூன்று பேரும் மேடையில் இருப்பதை பார்த்து எல்லோருமே இனியாவை கிண்டல் கேலி செய்தார்கள். அதனால் அவர் ரொம்ப அவமானப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோடில் அவமானத்தில் இனியாவால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் நண்பர்கள், ஆசிரியர்கள், விழாக்கு வந்த எல்லோருமே இனியாவையும் அவருடைய குடும்பத்தையும் கேலி கிண்டல் செய்தார்கள். இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விட்டார். பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லியும் இனியாவால் கவனம் செலுத்தி நடனம் ஆட வில்லை. இதனால் போட்டியில் இனியாவுக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்தது. கோபத்தில் இனியா ரொம்பவே கத்தி இருந்தார். அப்போது அவர், உங்களால் தான் நான் தோற்றேன்.
நேற்று எபிசோட்:
நீங்கள் எங்களுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் எல்லா பிரச்சினையும் என்று ரொம்ப மோசமாக ராதிகாவை பேசி விட்டார். ஆனால், எதுவுமே பேசாமல் வேதனையில் ராதிகா அங்கிருந்து கிளம்பி விட்டார். உடனே பாக்கியா, அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது உன் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் அவர் தான் என்று இனியாவை திட்டிவிட்டு கோபியை கேள்வி கேட்டார். அவரால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் பாக்யா, இரண்டு குடும்பமும் உங்களுடன் இருக்க நினைப்பது ரொம்ப தவறு. எல்லா தவறும் நீங்கள் செய்துவிட்டு மற்றவர்கள் மேல் பழி போடாதீர்கள் என்று கோபியை திட்டுகிறார்.
இன்றைய எபிசோட்:
அதற்குப்பின் பாக்கியா, நீ ராதிகாவை பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. எதுவாக இருந்தாலும் நீ உன் அப்பாவை தான் கேட்கணும் என்று சொன்னவுடன் இனியா கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார். அதற்கு பாக்கியா, என் மகளை நான் பார்த்துக்கொள்கிறேன். அவரவர்கள் வேலையை செய்யுங்கள் என்று சொல்கிறார். பாக்கியா சொன்னது தான் சரி என்று நினைத்து கோபி வருத்தப்படுகிறார். பின் பாக்கியா, இனியாவிடம் பேசி அவரை சமாதானம் செய்து விடுகிறார். இன்னொரு பக்கம் ராதிகா, இனியா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது வந்த கோபி, நான் உன்னை அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாது. இந்த பிரச்சனை வந்திருக்காது. எல்லோருமே சந்தோஷமாக இருப்பார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை மட்டும் யோசித்து பேசுகிறார். கொஞ்சம் கூட ராதிகாவின் நிலைமையை அவர் யோசிக்கவில்லை. மறுநாள் காலையில் பாக்கியா-ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா, எல்லோரும் வெளியே போகலாமா? நான் வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா ஒத்து கொள்கிறார். பின் இதைப் பற்றி ராதிகா, கோபியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து இனியா ஈஸ்வரிடம் பேச, அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது