வீட்டை காலி செய்த ராதிகா, ஈஸ்வரி விரித்த வலையில் சிக்கினாரா கோபி? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் செயலால் மனம் உடைந்த ராதிகா,
வீட்டை காலி செய்ய முடிவு எடுத்தார். பின் இனியா டான்ஸ் காம்பெடிஷனில் பாக்கியா குடும்பம் கலந்து கொண்டு இருந்தது. இனியா சூப்பராக நடனமாடி முதல் ஃபைனலிஸ்டாக தேர்வாகியிருந்தார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா வருத்தப்பட்டு இருந்தார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்தார்.
அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பினார். பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுத்தார்கள். உடனே ஈஸ்வரி, நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். எல்லோரும் கிளம்புங்கள் என்று சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார்.
பாக்கியலட்சுமி:
கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் கோபி வருவார் என்ற ஆசையில் ராதிகா, மயூ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த ராதிகா, கோபப்பட்டு வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைத்தார். பாக்கியா- ராதிகா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா எடுத்து சொல்லியும், ராதிகா கேட்காமல் கிளம்பி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். நேற்று எபிசோட்டில் இதை போட்டோ எடுத்து இனியா சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். இதை செல்வி பார்த்து பாக்கியா இடம் காண்பித்தார். பாக்கியாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய மொபைலில் இனியா வைத்த ஸ்டேட்டஸை பார்த்து தன் அம்மாவிடம் காண்பித்தார். அதற்கு அவர் அம்மா, என்ன மனுஷன் இவன்? கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? என்று திட்டடி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
அதன் பின் ஈஸ்வரி, கோபி, செழியன், இனியா எல்லோருமே கோயிலுக்கு போயிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, நீ எங்களை விட்டு எங்கேயுமே போகக்கூடாது. சத்தியம் செய் என்றார். கோபியும் சத்தியம் செய்து இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டை காலி செய்யும் விஷயம் பாக்கியாவுக்கு தெரிய வந்தது. பின் இதை போனில் இனியாவிடம் சொல்கிறார் பாக்கியா. இதை இனியா, ஈஸ்வரி இடம் சொல்கிறார். உடனே அவர், இந்த விஷயம் கோபிக்கு தெரியக்கூடாது. ராதிகா அங்கிருந்து போகட்டும் என்றார்.
சீரியல் ட்ராக்:
இனியா-செழியன் இருவரும் ஒத்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மா, மயூவை புது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவர் அந்த வீட்டில் ரொம்ப வருத்தத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார். பின் இருவரும் மனது விட்டு பேசுகிறார்கள். ராதிகாவின் பசி அறிந்த பாக்யா, அவருக்கு சாப்பாடு கொடுக்கிறார். ரொம்ப எமோஷனலாக சீரியல் முடிகிறது.