கோபியை பார்க்க தவிக்கும் ராதிகாவை வெளுத்து வாங்கிய ஈஸ்வரி, பாக்கியா நிலைமை? பாக்கியலக்ஷ்மி

By subhashini · 3/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் பாக்கியா ஹாஸ்பிடலில் சேர்த்தார். ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்தார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை. கோபியின் உடல்நிலை சீரியசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்து அழுது புலம்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி வராததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றார் ராதிகா. ஆனால், அங்கு யாருமே இல்லை. ராதிகா கோபியை தேடி அலைந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் எங்குமே கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் கோபியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். இது எல்லாம் பார்த்து செல்விக்கு பயங்கர கடுப்பாகி இருந்தது. அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்து வரவைத்து நடந்ததை சொன்னார். அதைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சி ஆனார். பின் கோபியை பார்க்க வந்த ராதிகாவை ஈஸ்வரி திட்டி விட்டார்.

பாக்கியலட்சுமி:

உடனே எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை தடுத்து அழைத்து சென்று விட்டார்கள். ஹாஸ்பிடலில் இருந்த ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் ஈஸ்வரி திட்டி இருந்தார். பாக்யா- எழில் தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. எவ்வளவு திட்டியும் ராதிகா அந்த இடத்திலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னால் தான் என் மகன் சாகப் போகிறான் என்று சொன்னவுடன் மனம் உடைந்து ராதிகா வெளியே வந்து விட்டார்.

நேற்று எபிசோட்:

பின் பாக்யா அவருக்கு ஆறுதல் சொன்னார். அப்போது பாக்கியா, உங்களுக்கு தகவலை சொல்ல எவ்வளவோ முயற்சி செய்தும் போன் ரீச் ஆகவில்லை. யாரும் போன் எடுக்கவில்லை என்று தான் அவர் எனக்கு போன் செய்தார் என்று நடந்ததை சொன்னார். அதற்கு ராதிகா, நீங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டீர்கள். ஒரு குடும்பமாகிவிட்டீர்கள் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்பினார். பாக்யாவின் சூழ்நிலையை ராதிகா கூட புரிந்து கொள்ளவில்லை. பாக்கியாவிற்கு செல்வி ஆறுதல் சொல்லி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் ரொம்பவே மனமுடையது ராதிகா அழுது கொண்டே போகிறார். மழை பயங்கரமாக பொழிகிறது. இருந்துமே அவர் அதை பொருட்படுத்தாமல் ஹாஸ்பிடலில் நடந்ததை நினைத்துக் கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் ராதிகா- கோபி உறவு தெரியும்போது இப்படி தான் மனம் உடைந்து பாக்கியா அழுது கொண்டே வருவார். தற்போது அதை காண்பிக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டிற்கு வந்த ராதிகா, கோபிக்கு ஹார்ட் அட்டாக். அவர் குடும்பத்துடன் சேர்ந்து விட்டார். என்னை யாருமே அவரை பார்க்க விடவில்லை என்றெல்லாம் சொல்லி புலம்பி அழுகிறார். அதற்கு அவருடைய அம்மா ஆறுதல் சொல்கிறார். பின் கோபி கண் விழித்து விடுகிறார். உடனே ஈஸ்வரி, இனியா, செழியன் மூவருமே அவரை பார்த்து பேசுகிறார்கள். பின் ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகாவை வழக்கம்போல் ஈஸ்வரி பயங்கரமாக திட்டுகிறார். பாக்கியா, எவ்வளவு சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full