ராமமூர்த்தியின் சதாபிஷேக விழாவிற்கு வரும் கோபி, கோபத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். உடனே அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்ல, எழில் தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.
ஒரு கட்டத்தில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழுதார். பின் கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இந்த வாரம் கோபி, தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்:
அப்போது ஈஸ்வரிடம் இந்த விஷயத்தை சொல்ல ஆரம்பத்தில் அவர் மறுத்தாலும் பிறகு சம்மதித்து விடுகிறார். அமிர்தா-எழில் இருவருமே வீட்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, தாத்தாவின் 80வது பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுத்தார். உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார். மேலும், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்.
சீரியல் கதை:
இன்னொரு பக்கம் அமிர்தா, நான் வரவில்லை. நீங்கள் போயிட்டு வாங்க, தாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று சொல்ல, நீ இல்லாத இடத்திற்கு நான் போக மாட்டேன் என்று எழில் அவருக்கு ஆறுதலாக பேசி இருந்தார். நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே தயாராகி இருந்தார்கள். ஆனால் தாத்தாவோ, எழில் போன் பண்ணாதது நினைத்து வருத்தப்பட்டு இருந்தார். பின் எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, எதற்கு கிளம்புகிறார்கள்? என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில், பாக்கியா குடும்பம் எல்லோருமே கோயிலுக்கு சென்று இருந்தார்கள். அங்கு தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது எழில் வராததை குறித்து கேள்வி கேட்க, ஜெனிக்கு கோபம் வந்து பதிலடி கொடுத்தார். இன்னொரு பக்கம் செழியன் போன் எடுக்காதது நினைத்து கோபி வருத்தப்பட்டு புலம்பிக் கொண்டிருந்தார். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நிற்கிறார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது.
https://youtu.be/FYm9fqKKj-I?si=QqifrOkQajU7aEzP
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், தன் அப்பாவின் 80-வது பிறந்த நாளை அறிந்து கோபி கோயிலுக்கு வருகிறார். அவரைப் பார்த்தவுடன் ராமமூர்த்தி-ஈஸ்வரி, கோபப்பட்டு நீ எதற்கு இங்கே வந்தாய்? நீ என் மகனே கிடையாது. இதை எல்லாம் என் மகள் பாக்கியா தான் செய்கிறார் என்று பேசுகிறார்கள். பின் கோபி தன்னிடம் இருந்த கிப்ட் கொடுக்க ராமமூர்த்தி தட்டிவிட்டு சென்று விடுகிறார். ஈஸ்வரி, நாங்கள் செத்தா கூட இங்கு வராதே என்று கோபப்பட்டு சொன்னவுடன் கோபி எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்கிறார்.