கோபியின் திட்டத்தை அறிந்து கொந்தளித்த ராதிகா , பாக்கியா சொன்ன அட்வைஸ்- பாக்கியலட்சுமி

By subhashini · 30/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் இனியா, கல்லூரியில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டார். பாக்கியா, சமையலுக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்த கோபி, தன்னிடம் வேலை செய்யும் நபரை, பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வேலை செய்ய அனுப்பி இருந்தார். உடனே அவர் நண்பர் எதற்கு என்று கேட்க, பாக்கியாவை பழிவாங்க இதை செய்கிறேன் என்று ஆக்ரோஷமாக கோபி பேசி இருந்தார். பின் அந்த நபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

மேலும், இனியா தன்னுடைய நடன போட்டிக்காக வீட்டில் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, ஜெனி, பாக்கியா எல்லோருமே கேட்க, ஏதோ காரணத்தை சொல்லி இனியா சமாளித்தார். இன்னொரு பக்கம் பாரில் தனியாக செழியன் குடித்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிட்டு விசாரிக்க, ஆபீஸில் பிரச்சனை என்று சொல்ல, ஆறுதல் சொல்லி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார் கோபி. செழியன் நிலைமையை அறிந்த பாக்கியா கோபப்பட்டு அறிவுரை சொன்னார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பாக்கியலட்சுமி:

அதற்குப்பின் செழியன் குடித்த விஷயம் தெரிந்து ஜெனி சண்டை போட்டார். மறுநாள் செழியன், தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்க, பாக்கியா கோபப்பட்டு, எனக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது, குடிக்கட்டுமா? என்று கேட்க, பொறுப்பு அதிகமானதால் டென்ஷனில் இப்படி எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்ல, நீ எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை. வீட்டு பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்கியா அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார். இன்னொரு பக்கம் கல்லூரியில் நடனப் போட்டியில் இனியா தேர்வாகி விட்டார்.

கடந்த வாரம்:

இதை வீட்டில் இனியா சொல்ல எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், டிவியில் வரும் நிகழ்ச்சியில் நடனமாட போகிறேன் என்று இனியா சொன்னவுடன் படிப்பு வீணாக போய்விடும், நடனமெல்லாம் வேண்டாம். படிப்பை கவனி என்று ஈஸ்வரி- பாக்கியா இருவருமே சொன்னார்கள். ஆனால், இனியா அவர்கள் சொன்னதை கேட்காமல் தன்னுடைய அப்பாவிடம் நடந்ததை சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கோபி, உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று இனியாவை தூண்டிவிடுகிறார். பின் கோபி உடன் இனியா பேசுவதை பார்த்த ஈஸ்வரி, எதற்கு அவனுடன் பேசுகிறாய்? என்று கேட்டதற்கு, ஈஸ்வரியை எதிர்த்து இனியா பேசி விட்டார்.

இன்றைய எபிசோட்:

எதுவுமே பேசாமல் ஈஸ்வரி அமைதியாகி விட்டார். உடனே செழியன், அவள் கேட்டதில் என்ன தவறு? அப்பாவிடம் ஏன் பேசக்கூடாது? என்று கேட்க, ஈஸ்வரி மனமுடைந்து உள்ளே சென்று விட்டார். பாக்யா, கோபப்பட்டு செழியனை திட்டி, தன் மாமியாரை சமாதானம் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், கோபி- ராதிகா இருவருமே இனியா சொன்னதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா, நீங்கள் சொன்னது சரியா? இனியா கேட்பது நியாயமா? தனக்கு வேணுமென்றதை எப்படியாவது அடையனும் என்று நினைக்கிறாள். அதற்கு நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்கள். இது நல்லது கிடையாது. எது தவறு?எது சரி? என்று அவருக்கு சொல்லிக் கொடுக்கணும்.

சீரியல் ட்ராக்:

நீங்கள் பாக்யாவை பழிவாங்க உங்கள் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறீர்கள் என்று திட்டி விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பாட்டியிடம் இனியா பேசியதை குறித்து பாக்கியா அறிவுரை சொல்ல, மறுநாள் இனியா தன்னுடைய பாட்டியிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போ வீட்டிற்கு வந்த எழில் எல்லோரையும் விசாரிக்கிறார். ஆனால், ஈஸ்வரி கஷ்டப்படுவதை பார்த்து எழில் ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு அவருடைய அம்மா வருகிறார். இதை பார்த்த கோபி கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full