பாக்கியா புது ஹோட்டல் தொடங்கும் விஷயத்தை அறிந்த சுதாகர், கோபத்தில் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி

By subhashini · 8/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் எழில்-செழியன் இருவருமே நீ நிம்மதியாக வீட்டில் இரு அம்மா. குடும்பத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னுடைய அம்மாவிற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோபி, ஈஸ்வரி சந்தோஷப்பட்டார்கள். அப்போது ஈஸ்வரி, நீ இனிமேல் எந்த ரெஸ்டாரண்டையும் நடத்த வேண்டாம். பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இரு என்று சொன்னார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லவில்லை. பின் பாக்கியா வாக்கிங் செல்லும்போது எல்லோருமே ரெஸ்டாரண்ட் இழந்த விஷயம் பற்றி கேட்டார்கள்.

அது பாக்கியாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் பாக்கியா, செல்வியை வரவைத்து புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க இடங்களை தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொன்னார். அதில் ஒருவர், பாக்கியா விவாகரத்து ஆன விஷயத்தை பற்றி கேட்டார். இதனால் பாக்கியாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நேற்று எபிசோட்டில் பாக்கியா, எந்த பிரச்சனை என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்பி கொடுங்கள் என்று கேட்டார். ஆனால், அந்த கடையின் ஒத்து கொள்ளவில்லை என்பதால் பாக்கியா அங்கு இருந்து கிளம்பி வந்து இருந்தார்.

பாக்கியலட்சுமி:

அதற்குப்பின் ஒரு சின்ன இடமாக இருக்கும் இடத்திற்கு சென்று ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி பேசி இருந்தார். செல்விக்கு அந்த இடம் பிடிக்கவே இல்லை. இருந்தாலும் பாக்கியா மனம் தராமல் அந்த இடத்தில் ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி அந்த ஓனரிடம் பேசி கன்பார்ம் செய்தார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா, தான் புதிய ஹோட்டல் ஆரம்பிப்பதை பற்றி சொன்னவுடன் எல்லோருமே கோபப்பட்டார்கள். எழில், செழியன் இருவருமே நாங்கள் குடும்பத்தை பார்த்து கொள்கிறோம் என்று பேசி இருந்தார். உடனே பாக்கியா, நீங்கள் எல்லோரும் பார்த்துக் கொள்வீர்கள் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் என் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படுகிறேன் என்று கூறி இருந்தார்.

நேற்று எபிசோட்:

உடனே ஈஸ்வரி, வழக்கம் போல பாக்கியாவை திட்டி இருந்தார். மறுநாள் காலையில் தன்னுடைய புது ஹோட்டலுக்காண அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, ஹோட்டலுக்கு தேவையான மொத்த பணத்தை கொடுத்து அக்ரீமெண்ட் போட்டு விட்டார். பின் வீட்டில் இதைப் பற்றி சொன்னவுடன் எல்லோருமே பாக்கியாவை தான் திட்டி இருந்தார்கள்.
எப்பவுமே சப்போர்ட் செய்யும் எழில் கூட இந்த முறை பாக்கியாவிற்கு எதிராக தான் பேசி இருந்தார். இதனால் பாக்கியா கொஞ்சம் வருத்தப்பட்டார்.

சீரியல் ட்ராக்:

இறுதியில் பாக்கியா, என்னை என் போக்கில் போக விடுங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, தன்னுடைய ஓட்டல் சரி செய்யும் வேலையில் மும்முறமாக செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோபி, பாக்கியாவின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் பாக்கியா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபி, நீ புதிதாக திறக்க போகும் ஓட்டலை பார்த்தேன். ரொம்ப சின்னதாக இருக்கிறது. எந்த உதவி என்றாலும் என்னிடம் கேள். நான் உனக்கு செய்கிறேன் என கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் தேவையில்லை என்றார். பின் எழில்- பாக்கியா இருவரும் புதிய ஒட்டலை பற்றி பேசி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியலட்சுமி தன்னுடைய மெஸ் திறப்பதற்கான வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த எழில்- அமிர்தா இருவரும் பாக்கியாவிற்கு வாழ்த்து சொல்கிறார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, புது மெஸ் ஆரம்பிப்பதை பற்றி கேட்டு சண்டை போடுகிறார். ஆனால், பாக்கியா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அதற்குப்பின் இனியா வந்திருப்பதை அறிந்த பாக்கியா அவரை பார்க்க சுதாகர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு இனியாவிடம் பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லு என்கிறார். அதுமட்டுமில்லாமல் புது மெஸ் ஆரம்பிக்கும் விஷயத்தை எல்லோரிடமும் சொல்கிறார். இதை கேட்டவுடன் சுதாகர் பயங்கரமாக கோபப்படுகிறார். பின் செழியன் இடம் சுதாகர் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full