இனியா செய்த வேலையால் சுதாகர் குடும்பம் தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு - பாக்கியலட்சுமி

By subhashini · 24/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியாவின் வீட்டிற்கு நோட்டீஸ் வந்தது. அதில் நிதிஷ் உடைய குடும்பம், இனியா கேரக்டரை பற்றி ரொம்ப மோசமாக சொல்லி இருந்தார்கள். பின் இனியாவின் கள்ளக்காதலால் தான் தன் மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானான் என்பதுபோல புகார் கொடுத்திருந்தார்கள். இது எல்லாம் பார்த்து இனியாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே கோபி, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீ கவலைப்படாதே என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார்.

பின் இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று நிதீஷ் இடம் சண்டை போட்டார். நிதிஷ், நிதிஷ் அம்மா, இனியா மூவருமே மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் சுதாகர் வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி விட்டார். உடனே கோபி, பாக்கியாவிடம் தகவலை சொல்லிவிட்டு இனியாவை பார்க்க வந்தார். அப்போது இனியா, நான் இதை சும்மா விடப்போவதில்லை. என்னை பற்றி அசிங்கப்படுத்தியவர்களை என்ன செய்கிறேன் பார் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் சுதாகர், இனியா ரொம்ப நல்லவள், அமைதியானவள் என்றெல்லாம் சொன்னீர்கள். இவ்வளவு அராஜகம் செய்து கொண்டிருக்கிறார். அவளை உடனடியாக மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று திமிராக பேசினார். இதைக் கேட்ட கோபி, சுதாகர் குடும்பத்தை திட்டினார். அதற்குப்பின் கோபி வேதனையில் பாக்கியாவின் கடைக்கு வந்து சுதாகர் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு பாக்கியா ரொம்பவே மனமடைந்து அழுதார். அதற்கு கோபி, எப்படியாவது இனியாவின் வாழ்க்கையை மாற்றிவிடலாம். அதை பற்றி கவலைப்படாது என்று ஆறுதல் சொன்னார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் தன்னுடைய மீடியா மூலம் சுதாகரின் குடும்பத்திற்கு பாடம் புகட்டஇனியா நினைத்தார். அப்போது டிவியில் இனியா, சுதாகர் உடைய பையன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவன். அவனால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது. ஆனால், அவர்களின் குடும்பம் என்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுகிறார்கள். என்னுடைய குடும்பத்தை தொந்தரவு செய்கிறார்கள். இனி அவர்கள் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றெல்லாம் சொன்னார். இதை பார்த்து சுதாகர் குடும்பத்தினர் பயங்கரமாக கோபப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா பேட்டி கொடுத்ததை பாக்கியா வீட்டில் எல்லோருமே பார்த்து விடுகிறார்கள். அதற்கு இனியா, இனி சுதாகர் குடும்பத்தால் நம் வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நான் ஐஜியிடம் சுதாகர் குடும்பத்தின் மீது புகார் கொடுத்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு எல்லோருக்குமே ஷாக் ஆக இருக்கிறது. ஆனால், இனியா அதை பற்றி பெரிதாக கவலைப்படாமல் கேஷுவலாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் சுதாகருக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி, இனியா புகார் கொடுத்ததை சொல்கிறார்கள். இதனால் சுதாகர் குடும்பமே தலைமறைவாகிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சுதாகர் குடும்பத்தை கைது செய்ய போலீஸ் வருகிறார்கள். ஆனால், சுதாகர் குடும்பம் தலைமறைவானதால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த விஷயம் இனியாவிற்கு தெரிகிறது.
அதற்குப்பின் கோபி, மன நிம்மதிக்காக நாம் ஒரு ட்ரிப் போகலாம் என்று வீட்டில் பேசுகிறார். எல்லோருமே சம்மதிக்கிறார்கள். அதற்குப்பின் கோபி வரும் வழியில் சுதாகர் வழிமறித்து, ஒழுங்கு மரியாதையாக இனியாவை கம்பிளைன்ட்டை வாபஸ் வாங்க வேண்டும். மீடியாவில் எங்கள் மீது தவறு இல்லை என்று சொல்லுங்கள் என்று மிரட்டுகிறார். அதற்கு கோபி முடியாது என்று பதில் சொல்கிறார். இதனால்
கொந்தளித்த சுதார், மொத்த குடும்பத்தையும் அழித்து சமாதி கட்டி விடுவேன் என்று கோபியை கீழே தள்ளிவிட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full