நிதிஸ் பற்றிய ரகசியத்தை மறைக்கும் சுதாகர், உண்மையை அறிவாரா பாக்கியா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர் வீட்டில் யாருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த கோபி, இனியாவை அழைத்து போனார். அப்போது இனியா, எதற்கு இந்த திருமணம் எனக்கு செய்து வைத்தீர்கள். ஆகாஷை காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே நிதிஷ் என்னிடம் நடந்து கொள்ளும் விதமே சரியில்லை. வீட்டில் எல்லோரிடமே சொல்லிவிட்டார். யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை. என்னை நடத்தும் விதமும் வேறு மாதிரி இருக்கிறது என்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதை கேட்டு கோபி ஷாக் ஆனார். பின் கோபி, எப்படியாவது உன்னுடைய வாழ்க்கையை சரி செய்கிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொன்னார்.
நேற்று எபிசோட்டில் கோபி, இனியா ஆகாஷை லவ் பண்ண விஷயம் நிதிஷிக்கு தெரிந்து விட்டது. இதனால் நிதிஷ் அவருடைய அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுங்கள். இதனால் மொத்த குடும்பமே இனியாவை நடத்தும் விதம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் இனியாவை பார்த்து நிதிஷும் அவருடைய அம்மாவும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோபத்தில் இனியாவும் அவர்கள் செல்வதற்கெல்லாம் பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட நிதிஷ், என்னுடைய அப்பா அம்மாவிடம் இப்படி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு இருக்கணும் என்று இனியாவை ரொம்ப மோசமாக திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப் பின் சுதாகரின் வீட்டிற்கு கோபி, பாக்கியா இருவரும் போனார்கள். அப்போது கோபி, இனியா- ஆகாஷ் காதலித்த விஷயத்தை பற்றி பேச, நிதிஷ் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே பாக்கியா, என் ரெஸ்டாரன்ட் விஷயத்தில் அமைதியாக இருந்தேன். அதனால் என் மகளின் வாழ்க்கையில் அமைதியாக இருக்க மாட்டேன் என்று சொன்னார். நிதிஷ், உங்கள் மகள் இன்னமும் ஆகாஷ் உடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்று இனியாவை பற்றி தவறாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பாக்கியா, சுதாகரிடம் கடுமையாக பேசி இருந்தார். உடனே கோபி, பாக்கியாவை அமைதியாகி விட்டு எதுவாக இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் இனியாவின் வாழ்க்கையை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ஈஸ்வரி, என்னானது? எதற்காக இருவரும் சண்டை போடுகிறார்கள் என்று கேட்கிறார். ஆனால், கோபி உண்மையை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். இன்னொரு பக்கம் சுதாகரின் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியாவிடம் சுதாகர், நீ ஆசைப்பட்ட வேலைக்கு போ.எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இனியாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், நிதிசுக்கும் அவருடைய அம்மாவிற்கும் அதில் துளி கூட விருப்பமே இல்லை.
சீரியல் ட்ராக்:
பின் இதைப் பற்றி இனியா தன்னுடைய அம்மாவிடம் போன் பண்ணி சொல்கிறார். பாக்கியா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள் காலையில் இனியா வேலைக்காக தயாராகி செல்கிறார். அப்போது
நிதிஷின் அம்மா, எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? இனியா செய்த தவறை மொத்தமாக குடும்பமே மறைத்திருக்கிறது என்று சொல்கிறார். உடனே சுதாகர், நாம் மட்டும் நிதிஷ் பற்றி எல்லா உண்மையும் சொல்லி விட்டோமா? இப்பதான் அவன் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வருகிறார். நம்முடைய பெயர் கெட்டுப் போய்விட்டது. நாம் இனியாவிற்கு பிடித்த சின்ன சின்ன விஷயத்தை செய்தால் எந்த பிரச்சனையும் வராது.
சுதாகர் மறைத்த ரகசியம்:
நாம் கோபப்பட்டால் இனியாவை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார்கள். எல்லாம் எனக்கு தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியாவின் ஹோட்டலுக்கு கவுன்சிலர் மீண்டும் வந்து வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவுடைய கஸ்டமர் ஒருவர், தன்னுடைய அம்மா சமைத்த சமையலை செய்து கொடுக்க சொல்கிறார்கள். பாக்கியாவும் அதை சமைத்துக் கொடுக்கிறார். அதை சாப்பிட்ட அந்த கஷ்டமர் ரொம்பவே அழுகிறார்கள். இதை பார்த்து கவுன்சிலரும் எதுவும் சொல்லாமல் தான் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு காசை கொடுத்து விட்டு அங்கிருந்து செல்கிறார். பின் இனியா தன்னுடைய அம்மாவை பார்க்க வீட்டிற்கு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.