இனியா திருமணத்தில் சுதாகர் போட்ட கண்டிஷன், பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 8/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, ஆகாஷ் கண்டிப்பாக கலெக்டர் ஆகுவான் என்று சொன்னவுடன் பாக்கியா, நீ உன்னுடைய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்து என்று சொன்னார். மறுநாள் காலையில் செழியன், அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. இனியாவை வர சொல்கிறார் என்று சொன்னவுடன் பாக்கியா, இது உங்க அப்பா போடும் நாடகம் என்று சொன்னார். பின் ஹாஸ்பிடலுக்கு சென்ற இனியாவிடம் கோபி, நான் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியவில்லை. இது நல்ல சம்மந்தம். தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக் கொள் என்று என்னென்னவோ சொன்னார். ஆனால், இனியாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

நேற்று எபிசோட்டில் இனியா, திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல்லி அப்பா, பாட்டி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் புலம்பி இருந்தார். உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நீ முடிவு எடு. யாருடைய பேச்சையும் கேட்காதே. என்னுடைய திருமணத்திலும் இப்படித்தான் என்னுடைய பெற்றோர்கள் அவசர அவசரமாக முடிவெடுத்தார்கள் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் இனியாவை வீட்டிற்கு வரவைத்து, ரொம்ப நல்ல பையன் .

பாக்கியலட்சுமி:

உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று மாற்றி மாற்றி ஈஸ்வரி- கோபி இருவருமே பேசி இருந்தார்கள். இனியாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர் வீட்டில் அவருடைய மனைவிக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. உடனே சுதாகரின் மகன், ரெஸ்டாரன்ட் வாங்குவதற்காக தான் இந்த திருமணமே என்று சொன்னார். மறுநாள் காபி ஷாப்புக்கு இனியாவை கோபி அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது சுதாகரின் மகனும் வந்தார். இருவருமே தனியாக பேச வைத்து கோபி சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோடில் ரெஸ்டாரண்டில் பாக்கியா, இனியா திருமணத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது செல்வி, இனியா நன்றாக இருக்க வேண்டும். வசதியான மாப்பிள்ளை பார்த்து இருக்கிறீர்கள். அங்கேயே கல்யாணம் செய்து விடுங்கள் என்று தன் மனதுக்குள் இருக்கும் ஆசையை அடக்கிக் கொண்டு சொல்கிறார். பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் அழுகிறார். இன்னொரு பக்கம் கோபி, இனியாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஆகாசிடம் கோபி, இனியாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். ரொம்ப வசதியானவன், பணக்காரவன் என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறார். அதைக் கேட்டு ஆகாசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின் கோபி, நீயே உன்னுடைய பிரண்டை திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள சொல் என்றவுடன் ஆகாசும் மனதுக்குள் வலியை வைத்துக்கொண்டு, நீ அந்த பையனை திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார். அதற்கு பின் தன்னுடைய அம்மாவிடம் இனியா, ஆகாஷ் வீட்டில் நடந்ததை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா, உன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உன் அப்பா பேச்சை கேட்காதே என்று அறிவுரை சொல்கிறார். அடுத்த நாள் சுதாகர் வீட்டில் எல்லோருமே திருமணத்திற்கு துணிகளை எடுக்க செல்கிறார்கள். அப்போது இனியாவும் சென்றிருக்கிறார்கள். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. பாக்யாவால் எதுவும் தடுக்க முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=yC-lWObyF9s

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரெஸ்டாரன்ட்டுக்கு வந்த சுதாகர், உங்கள் மகளுக்கு சீதனமாக நீங்கள் இந்த ரெஸ்டாரண்ட்டை என்னுடைய பெயரில் எழுதி வையுங்கள் என்று கேட்கிறார். உடனே ஷாக் ஆன பாக்கியா, முடியாது என்று சொல்கிறார். அதற்கு சுதாகர், நாளை உங்கள் மகள் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்றால் இந்த ரெஸ்டாரண்டை என் பெயரில் எழுதி வைக்கணும் என்று ஆர்டர் போடுகிறார். பின் வீட்டில் இதைப் பற்றி பாக்கியா சொன்னவுடன் கோபி, என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கணும். ரெஸ்டாரண்டை பற்றி விடு என்று சொல்கிறார். பாக்கியா குழப்பத்தில் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full