ரெஸ்டாரன்டை விட்டு வெளியே துரத்திய சுதாகர், வேதனையில் புலம்பிய பாக்கியா - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்தது. வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி ரொம்ப எமோசனலாக இனியா பேசிக் கொண்டிருந்தார். பின் பாக்யாவின் வீட்டிற்கு இனியாவையும் அவருடைய கணவரையும் அழைத்து சென்றார்கள். அங்கு பாக்கியா,உன் படிப்பையும் வேலையையும் விட்டு விடாதே என்று அறிவுரை சொன்னார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிவிட்டு அழுது கொண்டே இனியா தன்னுடைய கணவர் வீட்டுக்கு சொன்னார். பின் இனியா மாமியார் வீட்டில் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து உபசரித்தார்கள். அதுமட்டுமில்லாமல் இனியாவை விளக்கேற்றி வைத்து சாமி கும்பிட சொன்னார்கள்.
இனியாவை அவருடைய கணவர் வீட்டில் விட்டுட்டு அவருடைய அண்ணன் அண்ணிகளும் வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே இனியாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பின் இனியா தன்னுடைய கணவர் வீட்டில் எல்லோரிடமும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மாற்றி மாற்றி இனியா வீட்டில் இருந்து எல்லோருமே கால் செய்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய மகனிடம் செல்வி, தயவு செய்து படி. இனியா கல்யாணமாகி சென்று விட்டாள்.
பாக்கியலட்சுமி:
நம்முடைய குடும்பத்தை பாரு. நம்மை அவமானப்படுத்தியதற்காக படி என்று அறிவுரை சொன்னார்.
அதற்குப்பின் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு சென்றார். அங்கு வந்த சுதாகர், டாக்குமெண்டை காண்பித்தார். அதை படித்து பார்த்தவுடன் பாக்கியா ஷாக் ஆனார். அதில் ரெஸ்டாரண்டை மொத்தமாகவே சுதாகருக்கு எழுதி கொடுத்தது போல் மாற்றி எழுதி விட்டார். அதை பார்த்து பாக்கியா ரொம்பவே மனமடைந்து விட்டார். அதைக் கேட்டதற்கு சுதாகர், உங்கள் மகள் பெயர்தான் இருந்தது. என்று நக்கலாக பேசி இருந்தார். எதுவும் பேச முடியாமல் பாக்கியா வீட்டிற்கு வந்தார். அப்போது இனியா வீட்டில் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் இனியாவை பார்த்ததால் பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் கோபத்தை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே இனியா வந்தது நினைத்து சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எல்லோருக்குமே பாக்கியா சமைத்து பரிமாறினார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டரைப் பற்றி கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் இனியா கிளம்பியவுடன் பாக்கியா, நான் பயந்தது போலவே நடந்து விட்டது.
சீரியல் ட்ராக்:
இப்போ உங்கள் சம்மந்தி ரெஸ்டாரண்டிற்கு வந்து, எனக்கும் ரெஸ்டாரண்டிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். நான் இனியாவிற்கே மொத்தமாக எழுதிக் கொடுத்தது போல டாக்குமெண்ட்டை மாற்றிவிட்டார். நான்தான் முட்டாள் என்று சொன்னீர்கள். ஆனால், அவர் உங்கள் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார். நான் பயந்தது போலவே நடந்து விட்டது என்று ஆக்ரோசமாக கத்தி புலம்பி கொண்டிருந்தார். ஆனால், ஈஸ்வரி- செழியன்- கோபி மூவருமே பாக்கியா சொல்வதை நம்பவே இல்லை. பாக்கியா மன வேதனையில் எல்லோரிடமும் புலம்பி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் கோபி, நான் சம்மந்தி இடம் இதைப் பற்றி பேசுகிறேன் என்று ஈஸ்வரிடம் சொன்னார்.
https://www.youtube.com/watch?v=TL9o7PkS_xk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்கிறார். அங்கு வந்த சுதாகர், இந்த ரெஸ்டாரண்டுக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே போகிறீர்களா? கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டுமா? என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டு உடைந்துபோன பாக்கியா வேதனையில் வெளியே வருகிறார். பின் செல்வி,பாக்கியா இருவருமே நடந்ததை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள்.