அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர் தான், காரணம் இது தான் - மனம் திறந்து பேசிய நடன இயக்குனர் பாபா பாஸ்கர்
நடிகர் அஜித்குமார் பற்றி நடன இயக்குநர் பாபா பாஸ்கர் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே அஜித் பற்றிய செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு டெல்லியில் தான் பத்ம விருது விழா நடைபெற்றது. இந்த விருதை வாங்க அஜித் தன்னுடைய குடும்பத்துடன் சென்று இருந்தார்.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் கையால் அஜித் விருதை வாங்கி இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதோடு நீண்ட இடைவெளிக்கு பின் பிரபல ஊடகத்திற்கு அஜித் பேட்டி அளித்து இருந்தார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் அஜித் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு அஜித் பற்றி பல பிரபலங்கள் பேட்டியில் பேசி இருக்கிறார்கள்.
பாபா பாஸ்கர் சொன்னது:
இந்த நிலையில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அஜித்துடன் நான் குரூப் டான்ஸ் ஆடி இருக்கிறேன். ஏகன் படத்தில் வரும் ஃப்ரீடம் பாடலுக்கு மட்டும் நான் அவருக்கு கோரியோகிராப் செய்து இருக்கிறேன். அஜித் ஒரு கண்ணாடியை போன்றவர்.
அஜித் பற்றி சொன்னது:
அவரை மாதிரி பார்க்கவே முடியாது. ரொம்ப ஓபனாக இருப்பார். தீட்டினால் கூட ரொம்ப கடுமையாக திட்டி விடுவார். அதே மாதிரி பாசம் என்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார். அவர் சாப்பாடு விஷயத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களை கூட பார்த்து பார்த்து செய்வார். சொல்லப்போனால், அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர் தான் என்று கூறியிருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் குட் பேட் அக்லி.
குட் பேட் அக்லி:
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது.