குக் வித் கோமாளியில் மணிமேகலை சந்தித்த அவமானம் - ஓப்பனாக சொன்ன பாபா பாஸ்கர்

By subhashini · 16/3/2025

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை குறித்து பாபா பாஸ்கர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது வெகுளியான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார்.

மணிமேகலை குறித்த தகவல்:

முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார். அதன் பின் அந்த சீசனில் போட்டியாளராக இருந்த தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் மணிமேகலை-உசேன் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

மணிமேகலை சாதனை:

அதேபோல் இவர்கள் சொந்தமாக கிராமம் ஒன்றில் நிலம் வாங்கி அங்கு பண்ணை வீட்டை கட்டி இருந்தது அனைவரும் அறிந்தது. அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள். அதற்குப் பின் இவர் சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார். அதே போல் இரண்டு சொகுசு கார்கள், சொகுசு பைக் என்று தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி மணிமேகலை சென்று கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை, நான் எட்டு வருடம் ஆக தொகுப்பாளராக இருந்தேன்.

மணிமேகலை சொன்னது:

ஒருகட்டத்தில் எனக்கு காமெடி பேஸ்டு பெர்ஃபார்மன்ஸ் பண்ண வாய்ப்பு வந்தது. அப்போது என்னுடன் இருந்தவர்கள், தொகுப்பாளர்கள் என்றால் சின்ன ஹின்ட் கொடுப்பார்கள். அப்படியே பேசிவிட்டு போகலாம். மற்றபடி நடிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று என்னை ரொம்பவே டிமோட்டிவேட் பண்ணினார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நான் போராடி அந்த துறையில் நின்றேன். இப்போது என்னை பார்த்து பலருமே உனக்கு ஆங்கரிங் வருமா? என்று கேட்கிறார்கள். எது எனக்கு வராது என்று சொன்னார்களோ அதில் தான் சாதித்துக் காட்டினேன். நம் வாழ்க்கையில் பல கஷ்டம் வந்தாலும் முடியும் என்று போராடினால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும் என்று கூறினார்.

பாபா பாஸ்கர் சொன்னது:

உடனே மேடைக்கு வந்த பாபா பாஸ்கர், இந்த பொண்ணு ரொம்பவே கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ரொம்ப நல்ல இல்ல குணம் கொண்டவள். இவளுடனே இருப்பவர்கள் நன்றாக பேசி சிரித்துவிட்டு, இவளுக்கு பின்னாடியே நிறைய குறை சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் அவள் ரொம்பவே மனமடைந்து இருக்கிறார். இருந்தாலும் அவருடைய நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாக தான் நடக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி பாபா பாஸ்கர் சொன்னதற்கு காரணம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா- மணிமேகலைக்கு இடையே நடந்த சண்டையை பற்றி தான் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full