'உங்கள விட பப்லு மகன் இரண்டு வயது பெரியவர் ஆச்சே' - கேலிகளுக்கு பப்லுவின் வருங்கால மனைவி கொடுத்த பதில்.

By Rajkumar · 3/11/2022

நடிகர் பப்லு இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் மீது பல விமர்சனங்கள் எழுநது வருகிறது. இப்படி ஒரு நிலையில் நெகட்டிவ் கமண்டுகளுக்கு எல்லாம் முதல் முறையாக பப்லு மற்றும் அவரது வருங்கால மனைவியும் பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது இவருக்கு 55 வயதாகிறது.

தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ்.இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆக இருக்கும் செய்தி தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால இரண்டாம் மனைவியுடன் முதன் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கமெண்டில் வந்த சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அதில் ஒரு கமெண்டில் பொம்பள சுகம் கேக்குதா என்ற கமென்டிற்கு 'ஆம் கேக்குது' என்று பதில் அளித்துள்ளார். மேலும், தன் முதல் மனைவி குறித்து பேசிய பப்லு 'எனக்கு இவங்க நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை எனக்கு கொடுக்கிறாள்.

இதையெல்லாம் என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவங்க என்னை சரியாக கையாண்டிருந்தால் நான் வெளியில் சாப்பிட்டு இருக்க மாட்டேன் அவங்க நிச்சயம் இதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை' என்று கூறியுள்ளார். அதே போல பப்லுவின் வருங்கால மனைவிடம் 'உங்களை விட பப்லுவின் மகனுக்கு வயது அதிகம். அவரை நீங்கள் எப்படி பார்த்துக்கொள்ளப் போகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வீடியோவில் 20 : 40 நிமிடத்தில் பார்க்கவும் :

https://www.youtube.com/watch?v=pNW2dVPjsCk&t=1234s

அதற்கு பதில் அளித்த அவர் 'அவருக்கு 27 என்னைவிட இரண்டு வயது மூத்தவர் ஆனாலும் அவர் குழந்தைதான். அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதுதான். அவர் மிகவும் திறந்த மனதுடன் இருக்கிறார் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரை இந்த அளவிற்கு புரிந்துகொள்ள நான் அவ்வளவு நேரம் அவருடன் ஒதுக்கி இருக்கிறேன். அவரை நினைத்து நான் சந்தோஷமடைகிறேன்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full