நடிகை ராதிகா ஔவையார், அதனால் என் பெயர் கிழவன் - வேதனையில் பப்லு பிரித்திவிராஜ் பகிர்ந்த தகவல்
ராதிகா உடன் சீரியலில் நடித்து குறித்து நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருக்கிறார். இவரை எல்லோரும் பப்லு என்று தான் அழைப்பார்கள். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின் இவர் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். இதனிடையே இவர் பீனா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளா. பின் இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தார்கள். இந்த சமயத்தில் தான் பப்லுக்கு ஷீத்தலுடன் நட்பு ஏற்பட்டது. பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பிரித்விராஜ் அதை மறுத்தார்.
பிரித்திவிராஜ் பற்றிய தகவல்:
அதோடு நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் இதுவரை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார். பின் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இருவருக்கும் 30 வயது வித்தியாசம். அதற்கு பின் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் இவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய வேலையை செய்திருந்தார்கள். அதற்குப் பின் இருவரும் பிரிந்ததாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சீத்தல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏஸ் படம்:
அதன் பின் பப்லு தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பப்லு நடித்து இருக்கும் படம் ஏஸ். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஏஸ் படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் பப்லு நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பப்லு, நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன்.
பப்லு பேட்டி:
நிறைய போராட்டம், அவமானங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். இதனால் நான் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகி பணம், சொத்து, வீடு அனைத்தையும் இழந்து விட்டேன். அதன் பிறகு நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. காரணம், நடிகை ராதிகா சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=1ESpNmrvyXY
ராதிகா பற்றி சொன்னது:
அவர் தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதான ரோல் தான். அந்த சீரியலில் எனக்கு கிழவன் என்ற ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பின் நான் கண்ணான கண்ணே சீரியலில் ஒரு அப்பா கதாபாத்திரத்தில் தான் நடித்தேன். இதனால் பப்லு அப்பா கதாபாத்திரத்திற்கு தான் சரியானவர் என்ற பெயர் வந்து விட்டது. அதை தொடர்ந்து 15 படங்களில் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால், நான் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அதற்கு பிறகு தான் ஏஸ் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தார்கள். கதை கேட்டதும் எனக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.