ஷாலினி தங்கைக்கு இப்படி ஒரு திறமையாக - நேரில் சென்று பார்த்து வியந்து பாராட்டிய பிரபலங்கள்.

By Rajkumar · 24/6/2023

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றனர். சூர்யா ஜோதிகா துவங்கி ஆர்யா - சயிஷா என்று பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் இந்த லிஸ்டில் டாப்பில் இருப்பது என்னவோ அஜித் - ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள்.

பேபி ஷாலினியின் சகோதரியான ஷமிலி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார் இந்த படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது அதன் பின்னர் தமிழில் துர்கா தைப்பூசம் செந்தூர தேவி என்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீர சிவாஜி படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் தமிழில் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷமீலி. மேலும், ஷமீலி நடிகை என்பதை தாண்டி மிகவும் சிறப்பாக ஓவியம் வரையக் கூடியவர். குறிப்பாக ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்.

இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சியோடு பல ஓவிய படைப்புகளை உருவாக்கினார் ஷாம்லி.அடிக்கடி தனது ஓவியங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பகிர்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் 'ஷீ' என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உள்ளிட்ட அனைவருமே கலந்து கொண்டனர். 

View this post on Instagram

A post shared by Shamlee (@shamlee_official)

மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு ஷாம்லியின் ஓவியங்களை கண்டு வியந்து பாராட்டி இருந்தனர்.இந்த நிகழ்வில் அஜித் கலந்துகொள்ளவில்லை. தற்போது அஜித் விடா முயற்சி படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full