சம்பளம் கொடுக்காமல் ஏமாத்துறாங்க - காவல் நிலையத்தில் புகார் அளித்த கேம் சேஞ்சர் நடிகர்கள்- முழு விவரம் இதோ

By subhashini · 25/2/2025

இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் பட நடிகர்கள் போலீசில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில் இவர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 ஆகிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு இவருடைய இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த இந்தியன் 2 படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்தார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

கேம் சேஞ்சர் படம்:

இதை அடுத்து சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மொழியில் வெளியாகி இருந்த படம் தான் ‘கேம் சேஞ்சர்’. இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ராம்சரண் அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து ஷங்கர் இயக்கியிருக்கிறாராம்.

படம் குறித்த தகவல்:

மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவாகி இருந்தது. இந்த படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் வெறும் 150 கோடியை மட்டுமே ஈட்டியது. சங்கருக்கு இந்த படம் மிக பெரிய தோல்வி என்று தான் சொல்லணும்.

படக்குழு மீது புகார்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் போலீசில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டில் ஒருவரான தருண் என்பவர் குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சில நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால், இவர்களில் இன்னும் 350 பேருக்கு படத்தில் நடித்த சம்பளமே கொடுக்கவில்லை.

புகாரில் சொன்னது:

நாங்கள் செலுத்திய நேரத்திற்கும் உழைப்புக்கும் ஊதியமே கொடுக்கவில்லை. இந்த படத்தினுடைய படப்பிடிப்பிற்காக குண்டூர் மற்றும் விஜயவாடா பகுதிகளில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகர்கள் சென்றிருக்கிறார்கள். படத்தில் நடித்ததற்கு பிறகு அனைவருக்குமே சம்பளம் கொடுக்கப்படும் என்று இந்த படத்தினுடைய இணை இயக்குனர்கள் சொன்னார்கள். இயக்குனர் சங்கர், தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடிகர்களுக்கு சரியான ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த இணை இயக்குனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full