திராணி இருந்தா பேரு சொல்லு, அசிங்கமா இல்லையா? ராதிகாவை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்
நடிகை ராதிகாவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்து விசாரணையும் நடத்தி இருந்தார்கள். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கையை ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது.
பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்து பிரபல நடிகை ராதிகா, இந்தப் பிரச்சனை மலையாள சினிமாவில் மட்டும் கிடையாது தமிழ், தெலுங்கு என அனைத்து இடத்திலும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு இதுவரை பெண்கள் தான் குரல் கொடுத்து கொண்டுக் இருக்கிறார்கள். ஆண் நடிகர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவே இல்லை.
கேரவன் சர்ச்சை:
ஒருமுறை, மலையாள படம் ஒன்றின் படப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அது குறித்து விசாரித்த போது, அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இதனால் நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். அதன்பிறகு கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடிபேன் என்றேன். கேரவனுக்குள் கேமரா வந்தால் அவ்வளவுதான் என்று சொன்னேன்.
ராதிகா பேட்டி:
அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. இங்கு சினிமா சிஸ்டமே தவறாக இருக்கிறது. சினிமாவைப் பற்றி தானே தவறாக சொல்வது, நம்மைப் பார்த்து நாமே துப்பி கொள்வதற்கு சமம். யூடியூபில் யாரோ ஒருவன், நடிகர்கள் இப்படி எல்லாம் இருந்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்கிறான். நான் சொல்கிறேன், தைரியம் இருந்தால் அந்த நபரை போய் செருப்பால் விஷால் அடிக்கட்டும். விஷால் பொதுச் செயலாளர் தானே, அவர் ஒரு ஆம்பளையாக இருந்தால் போய் அடிக்கட்டும், நானும் தொடப்பம் எடுத்துக் கொண்டு கூட வரேன்.
ராதிகா சொன்ன விஷயம்:
பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறி இருந்தார்.
இப்படி ராதிகா சொன்ன விஷயம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதை அடுத்து இது தொடர்பாக மீண்டும் அளித்த பேட்டியில் ராதிகா, நான் கேரவன் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருந்ததை பார்த்துவிட்டு நடிகர் மோகன்லால் எனக்கு போன் செய்து, இது என் செட்டில் நடந்ததா? என்று கேட்டார். உடனே நான், அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. அது நீங்களோ, வேறு யாரோ என்று நான் சொல்லவில்லை. அந்த செட்டில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. நான் நடந்து போகும் போது பார்த்தேன். அது தவறான வீடியோவாக எனக்கு தெரிந்தது என்று கூறி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=vim2F_DEJ34
பயில்வான் வீடியோ:
இந்நிலையில் இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், துணிச்சலும் திராணியும், தைரியம் இருந்தால் யார் அவர்கள் என்பதை ராதிகா சொல்லட்டும். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் அவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ராதிகா படுத்துக்கொண்டே எச்சி துப்பினால் நம்ம மேலேயே துப்புற மாதிரி இருக்கும் என்று சொல்றாங்க. இப்ப மட்டும் என்ன ஆச்சு? அதுதானே நடந்துருக்கு. உங்களுக்கு சோறு போட்ட தொழிலில் மோசமான விஷயம் நடக்குது என்று நீங்களே குறை சொல்லுவீங்க. ஆனால், புகார் சொல்லவோ, சாட்சி சொல்லவும் வரமாட்டீங்க. இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா இல்லையா? என்று ராதிகாவை விமர்சித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே ராதிகாவின் குடும்பத்தை பற்றி மோசமாக பேசியிருந்த போது பயில்வானுக்கு ராதிகா தக்க பதிலடி கொடுத்திருந்தார். அதை வைத்து தான் பயில்வான் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், பயில்வான் கேட்பது சரிதானே. ராதிகா மீதி எந்த தவறும் இல்லையே, ஏன் அவர் குற்றவாளி பெயர்களை சொல்ல தயங்குகிறார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.