தயாரிப்பாளரை காதலித்து,நிட்சயம் வரை சென்று காதலரை கழட்டிவிட்டுவிட்டார் சினேகா - பிரபலம் கிளப்பிய புதிய சர்ச்சை.

By Dhilip Kumar · 27/9/2023

தயாரிப்பாளரை காதலித்து நடிகை சினேகா கழட்டிவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், விஜய் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்து பின் வாய்ப்புகள் குறைந்தவுடன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

காதல் To கல்யாணம் :

மேலும், இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார். இதனிடையே சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது படத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பின் 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் என்ற அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். இப்படி கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக இருவரும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சினேகா குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நடிகை சினேகா பிரசன்னாவை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே ஒருவரை காதலித்திருக்கிறார். ஆனால், அந்த காதல் தோல்வியில் தான் முடிந்தது. சினிமா தயாரிப்பாளர் ஒருவரை தான் சினேகா காதலித்தார். இருவருமே உருகி உருகி காதலித்திருந்தார்கள். ஒரு கட்டத்திற்கு பின் இவர்களுடைய காதல் திருமணம் வரை நகர்ந்தது. இருவருமே வைர மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள்.

நிச்சயதார்த்தத்திற்கு பின் தன்னுடைய காதலன் மீது சினேகா சந்தேகப்பட்டார். பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடைசியில் இவர் தனக்கு உண்மையாக இல்லை என்பது தெரிந்து கொண்டு தன் காதலை முடித்துக் கொண்டார் சினேகா. இதனால் இவர்கள் திருமணம் நின்று போனது. அதன் பிறகு தான் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full