தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

பகாசூரன் :

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் இப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அநாகரிகமான கேள்வி :

இந்நிலையில் பகாசூரன் படத்தில் நடித்த லாவண்யா படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்க வந்திருந்தார். அப்படி அவர் படத்தை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் அணிந்திருக்கும் உடையை வேண்டுமென்றே இப்படி கவர்ச்சியாக அணிந்திருக்கிறீர்களா இல்லை தெரியாமல் வந்துவிட்டதா என முகம் சுளிக்குமாறு ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “ஒரு நடிகை எப்படி உடையணிய வேண்டும், பகாசுரன் படத்திற்காக மோகன் ஜியை விமரசித்தீர்கள் இப்போது என் உடையை விமர்சனம் செய்கிறீர்களா என்று பதிலளித்தார்.

Advertisement

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

இப்படி ஒரு நடிகையை அதுவும் பெண்ணிடம் இந்த மாதிரியாக கேள்வி கேட்ட அந்த நபரை நெட்டிசன்கள் பலரும் தீட்டி தீர்த்து வருகின்றனர். இதில் நெட்டிசன்கள் சிலர் “பகாசூரன்” படத்தின் கரு பெண்கள் சரியாக இருந்தால் போதும், குற்றங்கள் வராது என கூறும் கதையில் உடன்பாடு கொண்டு நடித்து விட்டு இப்படி உடை உடுத்தலாமா? என்றும், சிலர் உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதனை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது என கருத்து குறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement