தனது 19 வயதில் அம்மாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்தது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள வாணி ராணி நடிகை தேனு.

By Rajkumar · 24/3/2021

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆனால், மொத்த சீரியல் இயக்குனர்களையும் குத்தகைக்கு எடுத்தது போல சன் தொலைக்காட்சி தான் அதிகப்படியான சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. 

https://twitter.com/Mysteri13472103/status/1374297491001155585

இந்த தொடரில் வாணி மகன் கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் நடித்திருந்தனர். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, பிப்ரவரி 6 ஆம் தேதி 2002 பிறந்தார் இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வரழ்ந்த்து எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார்.

இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நேகா சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். தற்போது 19 வயதாகும் இவர் சமீபத்தில் தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் ஒரு சிலரோ, இந்த வயதில் குழந்தை பெத்துக்கு வேணுமா என்று இவரது அம்மாவை விமர்சித்தனர். இதற்கு முன் கூட்டியே பதிலடி கொடுத்திருக்கும் நேகா, குப்பை தனமாக ரிப்லை செய்பவர்கள் பற்றி நான் கவலைபடபோவது இல்லை. எனவே, இங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full