'பாதம் தொட்ட நன்றிகள்' எமோஷனலாக கேபிஒய் பாலா வெளியிட்ட வீடியோ - எதுக்குன்னு நீங்களே பாருங்க

By subhashini · 7/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது பாலா ஹீரோவாக அறிமுகம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பாலா நடிக்கும் படத்தை இயக்குனர் ஷெரிஃப் இயக்குகிறார். இந்த படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன் நிறுவனம் மூலம் ஜெய்கிரண் தயாரிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு காந்தி கண்ணாடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சமூக சேவை செய்யும் பாலா:

மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார்.

ஹீரோவான பாலா:

இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் நடிக்கும் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை வைத்து பாலா இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த மனதை பலரும் பாராட்டி இருந்தார்கள். இப்படி பாலா படங்களில் தன்னுடைய கேரியரில் பிஸியாக இருந்தாலும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

பாலா வீடியோ:

அந்த வகையில் சமீபத்தில் சாஸ்திகா என்ற குழந்தை ரொம்பவே மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவருடைய மருத்துவ செலவிற்கு 8 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று தகவல் வெளியானது. இதனால் பாலா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்து பலரும் உதவி செய்திருந்தார்கள். இதனால் அந்த குழந்தைக்கு எட்டு கோடி ரூபாய் பணமும் கிடைத்து மருத்துவம் செய்யப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமாக நலமுடன் இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Balan Akassh Balaiyan Jaganathan (@bjbala_kpy)

நன்றி தெரிவித்த பாலா:

இந்நிலையில் நன்றி தெரிவித்து பாலா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், உதவி செய்த அனைவருக்குமே நன்றி. உங்கள் உதவியால் அந்த குழந்தை தற்போது இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உதவி அனைவருக்கும் பாதம் தொட்ட என்னுடைய நன்றிகள் என்று எமோஷனலாக கூறியிருக்கிறார். தற்போது இவருடைய வீடியோவை பார்த்த பலருமே பாராட்டியும் லைக்ஸ்களை குவித்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full